பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூழியல் 165 76. பொருள் தேடும் முறை பொருட்படுத்தத் தகாதவரையும் ஒரு பொருளாக மதிக்கச் செய்யும் பொருளைத் தவிர வேறு சிறந்த பொருள் இல்லை. 751. பொருள் இல்லாதவரை யாவரும் இகழ்வர் செல்வரை யாவரும் சிறப்பாக மதிப்பர். 752 பொருள் என்னும் குன்றா விளக்கு, தன்னை உடையவர் எண்ணிய நாடுகட்கெல்லாம் சென்று அவரது இருண்ட துயர் நீக்கும். . 753 ஈட்டும் முறை தெரிந்து தீங்கின்றி நல்வழியில் சேர்த்த பொருள், அறமும் அளிக்கும்; இன்பமும் ஈயும். 754 அருள் நெறியிலும் அன்பு வழியிலும் வராத பொருட் செல்வத்தைத் தொடாமல் அப்பால் தள்ளி விடுக. 755 தன்நாட்டில் கிடைக்கும் பொருளும், சங்கப் பொருளும், தன் பகைவரை வென்று பெறும் கப்பப் பொருளும் அரசனுக்குச் செல்வங்களாம். - 756 அன்பு என்னும் தாய்பெற்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செல்லமான செவிலித் தாயால் வளரும். 757 தன் கையிலே செயலுக்கு வேண்டிய ஒரு பொருளை வைத்துக் கொண்டு தொடங்கியவனது செயல், மலைமேல் ஏறிநின்று, யானைகள் இடும் போரை அஞ்சாது தெளிவாகப் பார்ப்பது போன்றதாம். 7.58 பொருளை மிகுதியாய்ச் சேர்க்க வேண்டும்; அதனினும், பகைவரது அகந்தையை அறுத்தெறியும் கூரிய வாள் வேறு இல்லை. 7.59 சிறந்த செல்வப் பொருளை நிரம்ப ஈட்டியவருக்கு, மற்ற அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருசேர எளிதில் கிடைக்கத்தக்க பொருள்களாம். 76O