பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையியல் 167 77. படையின் சிறப்பு எல்லாப் பிரிவுகளும் பெற்று இடையூறுகட்கு அஞ்சாமல் பகை வெல்லும் படை, அரசனுடைய செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்தது. 761 வெகு தொலைவில் போர் புரியும்போது அழிவு நேரினும் இடையூறுகட்கு அஞ்சாத ஆண்மை, பழம் பெரும் படைக்கு அல்லால் முடியாது. 762 கடல் இரைச்சலால் என்ன செய்துவிட முடியும்? பாம்பு மூச்சு விட்டாலே எலியாகிய பகை அழியும். 763 எதிரியால் அழியாததாய் ஏமாற்றப்படாததாய்த் தொன்றுதொட்டு வந்த வலிய ஆண்மையுடையதே சிறந்த Ł Jóð)L. 764 எமனே சினந்து மேலெழுந்து வந்தாலும், ஒன்று கூடி எதிர்த்து நிலைத்து நிற்கும் வன்மையுடையதே படை 765 வீரம், மானம், உயர்ந்த நெறியில் ஒழுகல், தெளிந்த உறுதி என்னும் நான்கும் உடைமை படைக்குக் காப்பாகும். 766 தன்மேல் வந்த போரை எதிர்த்துத் தாங்கும் முறை அறிந்து, எதிரியின் கொடிப் படையைத் தடுத்துத் தான் முன்னேறிச் செல்வதே படை 岑 767 எதிரியை அடித்து நொறுக்கும் வீரமும் எதையும் தாங்கும் ஆற்றலும் இல்லாவிடினும், தானையானது, படையெடுத்துச் செல்லும் மிடுக்கான தோற்றத்தாலேயே பெருமை பெறும். 768 கீழ்மையும் அரசரிடம் நீங்காத வெறுப்பும் ஏழ்மையும் இல்லையானால் படை வெற்றியடையும். 769 படையானது நிலைத்து நிற்கும் வீரர்களை மிகுதியாகப் பெற்றிருப்பினும், படைத் தலைவர்கள் இல்லை யெனில் தானும் இல்லாமல் அழியும். 770