பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 171 79. நட்பின் சிறப்பு நட்பைப் போல் கொள்ளுவதற்குச் சிறந்த பொருள்கள் வேறு எவை உள்ளன? அந்நட்பைக் காப்பதுபோல் வினைகளுக்குள் அரிய வினைகள் எவை உள்ளன? 781 நல்லோர் நட்பு, பிறை நிலா வளர்வதுபோல் நிறையும் தன்மையது. மூடர் நட்போ, முழு நிலா பின்னால் தேய்வது போல் குறையும் தன்மையது. 782 நற் பண்பு உள்ளவரின் நட்பு, கற்குந்தோறும் நூற்கள் இன்பம் நல்குவதுபோல் பழகுந்தோறும் இனிக்கும். 783 நட்பு கொள்வது ஒருவரோடு ஒருவர் உரையாடிச் சிரிப்பதற்கு அன்று நண்பர் முறைகடந்து நடந்தால் முற்சென்று இடித்துத் திருத்துவதாகும். 784 நட்புக்குப் பிரியாமல் சேர்ந்து பழக வேண்டும் என்பதில்லை; உள்ளம் ஒத்த உணர்ச்சியே நட்புரிமையை வளர்க்கப் போதுமானது. 785 முகம் சிரிக்கப் பழகுவது மட்டும் நட்பாகாது உள்ளம் மகிழ உள்ளன்புடனும் பழகுவதே உயர் நட்பு. 786 நண்பனை அழிவு தரும் தீச் செயல்களிலிருந்து நீக்கி நல் வழியில் செலுத்தி, மீறி அழிவுவரின் தானும் துன்பத்தில் பங்கு கொண்டு வருந்துவதே உண்மை நட்பு. 787 பலர்முன் உடை நழுவியவனது கை உடனே சென்று பற்றி மானம் காப்பது போல, நண்பனுக்குத் துன்பம் வந்த அப்போதே ஒடி அத்துன்பத்தைப் போக்குவதே நல்ல நட்பு. 788 நட்பிற்கு நிலைபெற்ற நிலை எது என்றால், என்றும் மாறாமல் முடிந்த போதெல்லாம் தாங்கிக் காக்கும் தகுதியே. 789 எமக்கு இவர் இவ்வளவு அன்பினர் - யாம் இவர்க்கு இவ்வளவு உரிமை உடையோம் என்று புனைந்து விளக்கினும் நட்பு பொலிவற்றுப் போகும். 790