பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 173 80. ஆராய்ந்து நட்பு கொள்ளல் ஆராயாது நட்பு கொள்வதை விடக் கெடுதி வேறு இல்லை; அப்படி நட்பு கொண்ட பின், நண்பர்களுக்குள் நட்பைக் கைவிடுதல் கூடாது. 7.91 ஆராய்ச்சிக்கு மேல் ஆராய்ச்சி செய்து நட்புக் கொள்ளாதவனுடைய தொடர்பு முடிவில் தான் இறக்கும்படியான துன்பத்தைக் கொடுக்கும். 79.2 ஒருவனுடைய குணத்தையும் குடிப் பிறப்பையும் செய்துள்ள குற்றங்களையும் கூடி உறவாடும் குழுவினரையும் ஆராய்ந்தறிந்து பின் அவனோடு நட்புக் கொள்க. 793 நற்குடியில் பிறந்து தன்னிடம் பழி வருவதற்கு வெட்கப்படுபவனை எது கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ள வேண்டும். 794 நாம் செய்யும் அறம் அல்லாச் செயலை இடித்துக் கண்டித்து நாம் அழும்படி அறிவுரை கூறி, உலகியல் அறிந்து ஒழுக வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளுக. 795 நமக்குக் கெடுதி வருவதிலும் ஒரு நன்மை உண்டு; அக் கெடுதி, நம் நண்பரின் உண்மையன்பை நீட்டி அளந்து காண உதவும் ஒருவகை அளவு கோலாம். 796 ஒருவனுக்கு நல்ல ஊதியமாவது, அறிவிலார் தொடர்பை விலக்கி விடுதலாம். 797 மன உறுதியைக் குறுகச் செய்யும் செயல்களை எண்ணலாகாது; அதுபோல, துன்ப நேரத்தில் தொடர்பு அறுப்பவரின் நட்பைக் கொள்ளலாகாது. 798 கேடு வந்தபோது கைவிட்டு ஓடுபவரின் நட்பு, எமன் உயிரைக் கொல்லும்போது நினைத்தாலும் நெஞ்சத்தைச் சுட்டு வருத்தும். 799 குற்ற மற்ற நல்லோர் நட்பைக் கொள்ளுக, பொருந்தாத தீயோர் நட்பை யாதொரு பொருள் கொடுத்தாயினும் தள்ளுக. 8 O O