பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 175 81. நெடுநாள் பழகிய நட்புரிமை பழைய நட்பு என்று கூறப்படுவது எது என்றால், பழைய நண்பர் பழைமை பற்றிக் கொண்டாடும் உரிமை எதையும் சிதைக்காத நட்பேயாம். 801 நட்பிற்குச் சிறந்த உறுப்பாவது பழைய உரிமை பாராட்டுதலாகும் மற்றும் அந்த உரிமைக்கு ஒத்துப் போதல் பெரியோர் கடமையாம். 802 நண்பர் பழைய உரிமை பாராட்டி ஒன்று செய்தபோது அதை ஏற்று அமைதி பெறாவிடின், நெடுநாள் பழகிய நட்பு யாது பயன் தரும்? 803 நண்பர் உரிமை பற்றித் தம்மைக் கேளாமலேயே ஒன்று செய்துவிடினும், அவர்மேல் உள்ள விருப்பத்தால் அவர் செயலையும் விரும்பி ஏற்றுக் கொள்வர் நல்லோர். 804 துன்பம் தரும் செயல்களை நண்பர் நமக்குச் செய்துவிடின், அதற்கு அறியாமை ஒன்று மட்டுமன்று - பெரிய உரிமையும் காரணம் என்று அறிக. 8 Ꭴ5 அன்பின் எல்லையில் நிற்கும் நல்லோர், தொல் நெடுங்காலமாய் நின்று நிலைத்த நண்பரின் நட்பை, அவரால் அழிவு நேர்ந்தபோதும் கைவிடார். 8 O 6 அன்புடன் கூடி நெடுநாளாய் வழிவழிவந்த நட்புடையவர், தம் நண்பர் அழிவு தரும் தீமைகள் செய்யினும் அன்பு நீங்கார். 807 நண்பர்மேல் பிறர் கூறும் குற்றத்தைக் காது கொடுத்துக் கேட்காத நல்லோர்க்கு அந்நண்பர் ஒரு நாள் தீங்கு செய்தால் அந்நாள் நன்னாளாம். 8 O 8 இடையே கெடாமல் தொன்றுதொட்டுப் பழகும் நண்பரின் நட்பைக் கைவிடாதவரை உலகம் விடாது விரும்பும். 8 O 9 பழைய நண்பரிடத்தில் பண்பு நீங்காமல் பழகுபவர், தம்மை விரும்பாத பகைவராலும் இனி விரும்பப்படுவர். 8.1 O