பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 177 82. தீய நட்பு அன்பை அள்ளிப் பருகலாம்போல் தற்போது பழகுகிறார் ஆயினும், நற்பண்பு இல்லாதவரது நட்பு, வளர்வதை விடக் குறைதல் இனியது. - 811 நன்மை உறுவதென்றால் நட்பு கொண்டு நன்மை இல்லையென்றால் விட்டுநீங்குகிற பொருத்தம் இல்லாத வரின் நட்பைப் பெற்றால் என்ன? இழந்தால் என்ன? 812. வரக் கூடிய நன்மையை மட்டும் ஆராய்கிற நண்பரும், கிடைப்பதைச் சுருட்டிக் கொள்ளும் விலை மகளிரும், திருடரும் ஒரு நிகர் ஆவர். 81 S போர்க்களத்தில் தாங்காது பழிவாங்கும் அறிவற்ற விலங்காகிய குதிரையைப் போன்றவரைத் தம் நண்பராய்க் கொள்வதனினும் தனியா யிருத்தல் மேலானது. 814 எவ்வளவு செய்தும் தமக்குக் காவலாய் இல்லாத கீழோ ரின் இழி நட்பைப் பெறுவதினும் பெறாமை நல்லது. 815 அறிவிலியின் மிக நெருங்கிய நட்பை விட, அறிவு டையவரின் நட்பில்லாமை கோடி மடங்கு நன்று. 816 சிரித்துப் பேசிக் காலங்கழிப்பவரின் நட்பை விட, பகைவரால் பப்பத்துக் கோடி மடங்கு நன்மை உண்டு. 817 தம்மால் முடியக் கூடிய செயலையும் முடிக்காமல் கெடுப்பவரின் தொடர்பை, அவரிடம் சொல்லாமலேயே நழுவ விட்டுவிடுக. 81.8 செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக வேறுபட்டு நடப்பவரின் உறவு, ஐயோ கனவிலும் இன்பம் தராது துன்புறுத்தும். 819 தனியே இல்லத்திலே உறவாடி, பலர் நிறைந்த மன்றத்திலே வந்து பழித்துப் பேசுபவரது நட்பு சிறிதும் அணுகாதவாறு காத்துக் கொள்க. 82O