பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 அறம் 3. நீத்தார் பெருமை ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. 21 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. 23 உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. 25 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். 26 சுவைஒளி ஊறு,ஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. 27 நிறைமொழி மாந்தர் ിത്രങ്ങഥ நிலத்து மறைமொழி காட்டி விடும். 28 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. 29 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். 3O