பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 179 83. பொருந்தா நட்பு உள்ளத்தே பொருந்தாமல் வெளியில் பொருந்தியவர் போல் நடிப்பவரின் நட்பு சரியான வாய்ப்பு கண்டால், அடித்தற்குரிய கொல்லுப் பட்டடை போல் நம்மை நசுக்குதற்குத் துணை புரியும். - - 821 நம் குழுவினர் போல் நடித்து உண்மையில் நம் குழுவினர் அல்லாதவரது நட்பு, விலைமகளிர் உள்ளம் போல் வேறுபட்டுத் திரியும். 822 பல சிறந்த நூற்களைக் கற்றிருந்த போதிலும் மனம் நல்லவராய்ப் பழகுதல், மாட்சிமை யற்றவர்க்கு இயலாது. 823 முகத்தால் இனிப்பாகச் சிரித்து மனத்தால் இனிமையற் றிருக்கிற கொடிய வஞ்சகரைச் சேர அஞ்ச வேண்டும். 824 மனத்தில் பொருத்தம் இல்லாதவரை, அவர் சொல்லைக் கொண்டு யாதொரு செய்தியிலும் நம்பக் கூடாது. 825 உண்மை நண்பர்போல் நல்லனவாகப் பேசினாலும், உள்ளம் பொருந்தாதவரது சொல்லின் உண்மைப் பொருள் விரைவில் அறியப்பட்டு விடும். 826 வில்லின் வணக்கம் (வளைவு) தீங்கு செய்யும் குறிக்கோள் உடையதாதலின், பகைவரின் சொல்லின் வணக்கத்தை உண்மையென்று கொள்ளக் கூடாது. 827 பகைவர் கூப்பி வணங்கும் கைக்குள்ளும் கொல்லும் படை ஒளிந்திருக்கும் பகைவர் அழுது சிந்தும் கண்ணிரும் அதுபோன்றதே. 828 வெளியே மிகவும் நட்புச் செய்து உள்ளே தம்மை இகழ்பவரைத் தாமும் பொய்யாக மகிழச் செய்து நட்பிலே அழிவு நேரச் செய்ய வேண்டும். 829 பகைவர் நண்பர்போல் நடித்து நெருங்கும் காலம் வரின், தாமும் முகத்தால் நட்புற்று அகத்திலே நட்பை விலக்கி விடுக. 830