பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 181 84. மடமை பேதைமை என்கிற ஒன்று எது எனில், கேட்டைக் கைக் கொண்டு ஆதாயத்தைக் கைவிடுதலாம். 831 ஒழுக்கமுறையல்லாத செயலில் விருப்பம் கொள்ளுதல், மடமைக்குள் எல்லாம் பெரிய மடமையாம். 8.32 நாணம் இன்மை, எதையும் ஆராய்ந்து செய்யாமை, அன்பின்மை, உயர் பொருள் எது ஒன்றையும் போற்றிக் காவாமை ஆகியவை மடவோர் இயல்புகள். 8.33 கற்றறிந்தும் பிறர்க்கு எடுத்து அறிவுறுத்தியும் தான்மட்டும் அடங்காது நடக்கும் அறிவிலியைப் போன்ற அறிவிலிகள் எவரும் இலர். 834 ஏழு பிறவிகளில் தான் புகுந்து புதைந்துபடக் கூடிய நரக வேதனையை, அறிவிலி ஒரு பிறவியிலேயே செயலாற்றிச் சேர்த்து வைத்துக் கொள்வான். 835 முறை அறியாத பேதை ஒரு செயல் மேற்கொண்டால், அச் செயல் பொய்த்துத் தவறி விடுவது ஒன்று மட்டுமா? கை விலங்கும் பூண வேண்டி வரும். 836 பேதையானவன் பெரிய செல்வம் பெற்று வாழும் போது, அயலார் நிரம்ப உண்டு களிக்கச் சுற்றத்தார் பசித்திருப்பர். 837 அறிவிலி தன் கையிலே ஒரு செல்வத்தைப் பெற்று விடின், முதலிலேயே பித்துப் பிடித்த ஒருவன் அதன் மேலும் கள் உண்டு களித்து ஆடினாற் போலாகும். 838 பேதையரின் நட்பு ஒரு வகையில் பெரிதும் இனியது: ஏதெனில், பிரிய நேரும்போது (இன்பமே யன்றித்) துன்பம் தரத்தக்கது ஒன்றும் இல்லை. 8.39 சான்றோர் குழுவினுள் பேதை ஒருவன் நுழைதல், கழுவித் தூய்மை செய்யாத காலைப் படுக்கையில் வைப்பது போன்றதாகும். 84 O