பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 183 85. புல்லிய சிற்றறிவு உடைமை சிறந்த அறிவு இல்லாமையே ஏழ்மைக்குள் கொடிய ஏழ்மையாகும். மற்ற பொருள் j ஓர் ஏழ்மையாக உலகம் கொள்ளாது. 841 நல்லறிவில்லாத ஒரு நேரம் உள்ளம் விரும்பி ஒரு பொருளைப் பிறர்க்கு உதவுவதற்குக் காரணம் வேறெதுவும் இல்லை; பெற்றுக் கொள்பவன் இயற்றிய தவப்பயனே அது 842 அறிவிலிகள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ளும் துன்பங்களைப் பகைவராலும் உண்டாக்க முடியாது. - 84 S அறிவின்மை எனப்படுவது எது எனின், 'யாம் விளக்கமான அறிவுடையேம் எனத் தம்மைத் தாமே உயர்வாக மதித்துக் கொள்ளும் இறுமாப்பே. 84.4 ஒருவர் கல்லாத கலைகளைக் கற்றதாக மேலேற்றித் திரியும் செயல், அவர் குற்றமறக் கற்று வல்ல கலையறிவின் மேலும் பிறர் ஐயப்படச் செய்யும். 845 தம்மிடம் உள்ள ஒழுக்கக் கேடுகளை ஒழித்து மறைக்காத போது, உடம்பில் மறைவான உறுப்புக்களை மட்டும் உடையால் மறைப்பது புல்லறிவாம். 846 அரிய மறைபொருளை வெளிவிடும் அறிவிலி, தானே தனக்குப் பெரிய தீமை செய்து கொள்வான். 847 பிறர் ஏவியும் செய்யத் தெரியாதவனாய்த் தானாகவும் அறிய முடியாதவனா யிருப்பவன் உயிர் பிரியும் வரையும் உலகுக்கு ஒரு நோயாவான். 848 புல்லறிவாளன், ஆராய்ந்துகாண முடியாத பிறன் ஒருவனுக்குத் தான் அறிவிப்பான்; ஆனால் தான் ஒன்றும் காண மாட்டான் காண முடியாத பிறனும் இவன் அறிந்த அளவுதான் அறிந்திருப்பான். 849 உலகினர் உண்டு என்று நம்புவதை இல்லை யென்று மறுப்பவன், உலகிலே ஒரு பேயாக வைத்து எண்ணப் படுவான். 85 O