பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல 185 86. பிறரிடம் முரண்பாடு கூடாமை எல்லா உயிர்கட்குமே பாகுபாடு என்னும் பண்பற்ற இயல்பைப் பெரிதாய் வளர்க்கும் பிணி, முரண்பாடு ஆகும் என்பர் அறிஞர். 85.1 ஒருவன் நம்மிடம் பாகுபாடு (வேறுபாடு) கொண்டு பற்றில்லாச் செயல்கள் புரிந்தாலும் முரண்பாடு கருதி அவனுக்குத் துன்பம் இழைக்காமையே மேலானது. 852 முரண்பாடு என்கிற துன்பம் தரும் நோயை நீக்கி விடின், அழிவில்லாத குற்றமற்ற புகழ் விளக்கத்தை அளிக்கும். - 853 துன்பங்களுள் கொடியதான முரண்பாடு என்னும் துன்பம் தொலைந்து விடின், இன்பங்களுள் மேலான இன்பம் அளிக்கும். 854 முரண்பாட்டிற்கு எதிரே வளைந்து கொடுத்து நடக்க வல்லவரை, முற்பட்டு வெல்லவல்ல ஊக்கமுடையவர் எவர் உளர்? 855 முரண்பாட்டில் மிகுந்து நடத்தல் இனியது என்று எண்ணுபவனது வாழ்க்கை, குறைதலையும் அழிதலையும் அண்மையில் உடைத்தாம். 856 முரண்பாட்டை விரும்புதலையுடைய இனிமையற்ற புல்லறிவினர், மிக்க சிறப்பு மேவுதலுக்குரிய உண்மைப் பொருளை உணர மாட்டார். 857 முரண்பாட்டிற்கு எதிரே வளைந்து கொடுத்தலே ஆக்கமாம்; அம் முரண்பாட்டை மிகுதிப் படுத்த ஊக்கம் கொள்ளின், கேடு வர ஊக்கம் கொள்ளும். 858 ஒருவன் ஆக்கம் வரும்போது முரண்பாடு கொள்ளான்; கேடு தேடிக் கொள்வதற்கே அம் முரண்பாட்டை மிகுதியாகக் கொள்வான். 859 துன்பங்கள் அத்தனையும் முரண்பாட்டினால் உண்டாகும்; மகிழ்ந்து உறவாடுவதால் நல்ல நயம் உடைமை என்னும் களிப்பு தோன்றும். 860