பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 189 88. பகைவரை வெல்லும் அறிதல் பகைமை என்னும் பண்பற்ற ஒன்றை ஒருவன் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது. 871 வில்லாகிய ஏரை உடைய உழவராகிய வீரரின் பகையைக் கொண்டாலும், சொல்லாகிய ஏரை உடைய உழவராகிய புலவரின் பகையைக் கொள்ளலாகாது. 872 தான் தனியாய் நின்று பலருடைய பகையை வருவித்துக் கொள்பவன், பித்தம் பிடித்தவரினும் அறிவிலி ஆவான். 873 பகைவரையும் நண்பராக மாற்றி ஒழுகும் பண்பாளனது சிறப்புத் தகுதியின் துணையில் உலகம் தங்கி வாழ்கிறது. 874 தனக்கோ வேறு துணை இல்லை; தன் பகைவரோ இருவர்; தான் ஒருவன், அங்ங்னமாயின் அப்பகைவருள் ஒருவரை இனிய துணையாகக் கொள்க. 875 முன்பு ஒருவனை ஆராய்ந்து நம்பினும் நம்பாவிடினும், கேடுவந்தபோது அவனை நம்புதலோ, அன்றிப் பிரித்தலோ செய்யாது பேசாமல் விடுக. 876 தான் நொந்திருப்பதை அறியாதவரிடத்தில் தன் நோவை வெளிப்படுத்தலாகாது; பகைவரிடம் மென்மையாய் இருக்கக் கூடாது. 877 செய்ம்முறை தெரிந்து தனக்கு வேண்டியதைச் செய்து முடித்துத் தற்காப்புச் செய்து கொண்டால், பகைவரிடம் உள்ள இறுமாப்பு அழியும். 878 முள்மரம் சிறிதாய் உள்ளபோதே வெட்டியெறிக அது வைரம் பாய்ந்து முற்றிவிட்டபோது வெட்டுபவரின் கையைக் குத்தி வருத்தும். (முள்மரம் = பகை) 879 எதிர்ப்பவரின் இறுமாப்பை அழிக்க முடியாதவர் மூச்சு விடும் அளவுக்குக் கூட உயிர் உடையவர் ஆகார்; இது திண்ணம். 880