பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 191 89. உள் பகை சில நிழலின் குளர்ச்சி உடலுக்கு நோய் தருமாயின் பொல்லாததேயாம்; சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் தருமாயின் பொல்லாதனவே. 88.1 வாள் போன்ற வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டா உறவு போல் நடித்து உள்ளே பகை கொண்டவரின் நட்புக்கே அஞ்ச வேண்டும். 882 உட்பகைக்கு அஞ்சித் தற்காப்பு செய்துகொள்க, சோர்ந்த நேரத்தில் குயவன் மண் கலத்தை அறுத்து எடுக்கும் கருவி போல, அந்த உட்பகை மிகவும் அழித்து விடும். 883 மனத்தில் பொருந்தாத உட்பகை ஏற்படின், தன் சுற்றத்தார்க்கு ஏலாத குற்றம் பல விளையும். 884 ஒருவனுக்கு உறவு முறையோடு நடிக்கும் உட்பகைவர் இருந்தால், அவன் இறக்கும் வகையில் குற்றம் பல கொடுக்கப்படும். 885 ஒன்றியடுத்துள்ள, உறவினரிடம் உள்ள ஒன்றாத உட்பகை தோன்றின், தான் அழியாமல் வாழ்தல் என்றும் இல்லை. 886 உள்பகை கொண்ட குடியினர், செப்புக் கலத்தோடு மூடியின் சேர்க்கை போல் வெளிக்குக் கூடியவர்போல் தெரியினும் உண்மையில் கூடார். 887 உட்பகை கொண்ட குடி, அரத்தால் அராவிக் குறைக்கப் பட்ட பொன்னைப் போல், வலிமை எதிர்க்கப்பட்டுத் தேய்ந்து அழியும். 888 உட்பகை எள்ளின் பிளவு அத்தனை சிறியதாயிருப் பினும் கேடு உடையதாம். 889 உளப் பொருத்தம் இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள் பாம்போடு சேர்ந்து வாழ்வது போன்றதாம். 890