பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 193 90. பெரியவரிடம் பிழைபட நடவாமை எதையும் ஆற்ற வல்ல பெரியவரின் ஆற்றலை இகழாது மதித்தல், தம்மைக் காக்க விரும்புவோர் செய்து கொள்ளும் காப்புக்கள் யாவற்றிலும் சிறந்ததாம். 89.1 . பெரியாரைப் போற்றாது புறக்கணித்தால், பெரியோரால் நீங்காத துன்பம் சேரும். 892 ஒருவன் தான் கெட விரும்பினால், பிறரை அழிக்க எண்ணினால் செய்து முடிக்க வல்லவரிடம் யாரையும் கேளாமலேயே குற்றம் புரியலாம். 89.3 ஆற்றல் மிக்கவர்க்கு ஆற்றல் இல்லாதவர் துன்பம் செய்தல், எமனைக் கையசைத்துக் கூவி அழைப்பது போன்றதாம். 89.4 கொடிய வலிமையுடைய வேந்தனால் சீறப்பட்டவர் எங்கெங்கே சென்றாலும் எங்கும் உயிர்வாழ முடியாது. 895 நெருப்பால் சுடப்பட்டாலும் உய்யும் வழி உண்டு; ஆனால், தம்மினும் பெரியவரிடம் பிழைபட நடந்து கொள்பவர் உய்ய மாட்டார். 896 ஒருவனைத் தகுதி சிறந்த பெரியவர் சீறினால் பல துறைகளிலும் சிறந்துள்ள அவனுடைய பெரு வாழ்வும் பெருஞ் செல்வமும் என்னவாகும்? 897 மலைபோலும் மாண்புடைய பெரியார் அழிக்க எண்ணினால், நிலைத்து நின்று வாழ்பவர் போல் தோன்றுபவரும் தம் குடியுடன் உலகில் அழிந்து விடுவர். 898 உயர்ந்த குறிக்கோள் உடைய பெரியவர் சினந்தால், அரசனும் இடையிலே ஒடிந்து ஆட்சி இழப்பான். 899 மிகச் சிறந்த சிறப்புடையவர் சீறினால், அளவு கடந்து அமைந்துள்ள பக்கத் துணைவலிமை உடையவரும் பிழைக்க முடியாது. 9 OO