பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்பியல் 195 91. பெண்ணின்பத்திற்கு அடிமையாதல் மனைவியின் இன்பத்தையே விரும்புபவர் வேறு சிறந்த பயன் அடையார். அக்காம இன்பம், செயல் முடிக்க விரும்புபவர் விரும்பக் கூடாத பொருளும் ஆகும். 901 செயலை விரும்பாமல் பெண்ணை விரும்புபவனது ஆக்கம், மிகப் பெரிய ஒரு வெட்கக் கேடாக நாணித் தலைகுனியச் செய்யும். * 9 O2 மனைவிக்குத் தாழ்ந்து நடக்கும் முறையற்ற தன்மை எப்போதும் நல்லவரிடையே நாணித் தலைகுனியச் செய்யும். 903 (சிற்றின்பத்திற்காக) மனைவிக்கு அஞ்சுகிற - மறுமையின்பம் இல்லாத ஒருவன் மேற்கொண்ட செயலாட்சி சிறப்புறுதல் இல்லை. . 904 மனைவிக்கு அஞ்சுபவன், மற்று எப்போதும் நல்லவர்க்கு நன்மைகள் செய்ய அஞ்சுவான். 9 O 5 மனைவியின் மூங்கில் போன்ற மெல்லிய தோளுக்கு அஞ்சுபவர், தேவரே போல வளமுடன் வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவரே ஆவர். 9 O 6 (நாணம் இன்றிப்) பெண்ணுக்கு அடிமை செய்து வாழ்பவனது ஆண் தன்மையை விட, நாணம் உடைய பெண் தன்மையே பெருமை உடையதாம். 907 அழகிய நெற்றியை உடைய மனைவி விரும்புகிறபடி யெல்லாம் ஆடுபவர், தம் நண்பரின் குறைகளை முடிக்க மாட்டார்; தாமும் நல்லறம் புரியார். 908 பெண்ணுக்கு அடிமை செய்பவரிடத்தில், அறச் செயலும் போதுமான பொருள் தேடும் முயற்சியும் இன்னும் மற்ற நற்செயல்களும் இரா. . 909 ஆராய்ந்து எண்ணுதலை உடைய உள்ளத்தோடு நல்ல வாய்ப்பும் உடையவர்க்கு, பெண்ணைச் சுற்றித் திரியும் அறியாமை என்றும் இராது. 91 O