பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 205 96. உயர் குடிப்பிறப்பின் சிறப்பு உயர் குடியில் பிறந்தவரிடம் அல்லாமல் ஏனையோரிடம் நடுநிலைமையும் நாணும் இயற்கையாக ஒருசேர இருப்பதில்லை. 951 உயர் குடியில் தோன்றியவர், நல்லொழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்றிலிருந்து தவறி ஒழுகார். 952 உண்மையில் உயர் குடியில் பிறந்தார்க்கு முகமலர்ச்சி, கொடை, இன்சொல், பிறரை இகழாமை ஆகிய நான்கும் உரிய இயல்புகள் என்பர். 95.3 நற்குடிப் பிறப்பினர், அடுக்கடுக்காகப் பலகோடிப் பொருள் கிடைப்பதானாலும், குடிப் பெருமை குன்றும் படியான தீச் செயல்கள் புரியார். 954 பழம் பெருங்குடியில் பிறந்தவர், பிறர்க்கு வழங்கும் வசதி ஏழ்மையால் உள் இழுத்துக் கொண்டாலும் கொடுக்கும் பண்பிலிருந்து நீங்குதலில்லை. 955 'குற்றமற்ற குடிப் பெருமையைக் காத்து வாழ்வோம்' என்று கூறி வாழ்பவர், வஞ்சகம் கொண்டு சிறப்பற்ற செயல்கள் செய்யார். 956 நற்குடியில் பிறந்தாரிடம் உள்ள சிறு குற்றமும், விண்ணில் உள்ள வெண்ணிலாவின் நடுவே உள்ள களங்கம்போல் பலர் அறியப் பெருகித் தோன்றும். 957 ஒருவனது ஒழுக்க நெறியில் அன்பின்மை காணப்படின், அவனை அவனது குடிப்பிறப்பின் தொடர்பாக ஐயப்பட வேண்டி வரும். 958 மண்ணிற்கு உள்ள இயல்பை அம்மண்ணில் முளைக்கும் முளை அறிவித்துவிடும்; அதுபோல, ஒருவர் இன்னகுடியில் பிறந்தவர் என்பதை அவரது வாய்ப் பேச்சு தெரிவித்து விடும். 959 ஒருவன் நன்மை விரும்பினால் நாணம் உடையவனா யிருக்க வேண்டும்; குடிப் பெருமையை விரும்பினால் எவரிடத்தும் பணிவாய் ஒழுக வேண்டும். 96.O