பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் 207 97. மானம் உடைமை உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத (முக்கியமான) சிறப்புடைய செயல்களாயிருப்பினும், மானம் குன்றும்படி வருஞ் செயல்களைக் கைவிடுக. 961 புகழுடன் பெரிய வீரத்தையும் விரும்புபவர், சிறப்புக்களுக்குள்ளே மிக்க சிறப்பு இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார். 962 வாழ்வு பெருகியுள்ளபோது ஒருவனுக்குப் பணிவு வேண்டும்; வாழ்வு சிறுத்துச் சுருங்கிய போதோ உயர்ந்த மானம் வேண்டும். 96.3 மக்கள் உயர் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டபோது முன்பு போற்றிக் காத்த தலையினின்றும் விழுந்து விட்ட மயிர் போல் தாழ்த்தப்படுவர். 964 மலைபோல் உயர்ந்த பெரியோரும் மானம் குன்றும் செயல்களைக் குன்றிமணி யளவு சிறிது செய்துவிட்டாலும் தாழ்ந்து விடுவர். 965 தம்மை இகழ்பவரின் பின் சென்று மானமின்றி வாழும் நிலை, புகழும் தராது; தேவர் உலகத்திற்கும் செலுத்தாது; வேறு என்னதான் செய்யும்? 966 தன்னொடு பொருந்தாதவரின் பின் சென்று கையேந்தி நின்று ஒருவன் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாமல் அப்படியே அழிந்து விட்டான் என்று உலகினரால் பேசப்படுதல் மிக நல்லது. 967 தன் பெருந்தன்மையின் சிறப்பு அழிய நேர்ந்தபோது மானம்விட்டு உடலை வளர்க்கும் வாழ்க்கை மற்றும் எப்போதும் உயிர்போகாமைக்கு மருந்தாகுமா? 968 உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர், உயிர் விடுவதால் மானம் நிலைக்கு மென்றால் உயிரை விட்டு விடுவர். 969 இழிவு நேரின் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகினர் வணங்கிப் போற்றுவர். 97 O