பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 209 98. பெருந்தன்மை ஒருவனுக்கு ஒளி (பெருமை) தருவது ஊக்க மிகுதியே: அந்த ஊக்கம் இழந்து வாழலாம் என்று சோம்புதல் ஒருவனுக்கு இழிவாகும். 971 எல்லா உயிர்கட்குமே பிறப்பு ஒரே மாதிரிதான்; ஆனால், அவரவர் செய்யும் செயல் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பதில்லை. 97.2 (பதவி முதலியவற்றால்) மேல் நிலையில் இருந்தாலும் மேலான பண்பு இல்லாதவர் மேலானவர் ஆகார்; கீழ் நிலையில் இருப்பினும் கீழான தன்மை யில்லாதவர் கீழானவர் ஆகார். . 973 ஒரு நெறி நிற்கும் கற்புடைய பெண்டிரே போல, ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொண்டு ஒழுகினால் தான் பெருமையும் உண்டாகும். 97.4 பெருமை உடையவர்கள், மிக அரிய செயலையும் செய்ய வேண்டிய முறைப்படி செய்து முடிப்பார்கள். 975 பெரியாரைப் போற்றித் துணையாகக் கொள்வோம் என்னும் சிறந்த குறிக்கோள், சிறியவரின் உணர்ச்சியில் எட்டுவதில்லை. 976 சிறப்புக்கூட, ஒழுங்கற்ற சிறியவரிடம் தப்பித்தவறி ஏற்படுமாயின், சாவையே தரும் கொலைத் தொழிலின் தன்மை உடையதாம். 977 பெருமைப் பண்பு எப்போதும் பணிவாய் இருக்கும்; சிறுமைத் தன்மையோ தன்னைத் தானே வியந்து மெச்சிக் கொள்ளும். . 978 பெருமிதம் அடித்துக் கொள்ளாதிருத்தல்தான் பெருமை யாகும் மிகவும் பெருமையடித்துத் திரிதலோ சிறுமையாகும். 979 பெருமைக் குணம் மற்றவருடைய குற்றங் குறைகளை மறைக்கும்; சிறுமைத் தன்மையோ மற்றவரின் குற்றங் களையே பேசிக் கொண்டிருக்கும். 9 8 O