பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. உயர் பண்பு உடைமை எவரிடத்தும் பண்புடையவரா யிருக்கும் ஒழுகலாற்றை, எளிமையாய்ப் பழகுதலால் அடைதல் எளிது என்பர் அறிஞர். 99.1 அன்புடைமை, உயர் குடிப் பிறப்பியல்பு ஆகிய இரண்டும் பெற்றிருத்தல் பண்புடைய ஒழுக லாறாம். 992 ஒருவன் உடல் உறுப்புக்களால் மற்றவரோடு ஒத்திருப்பது உண்மையான ஒப்பாகாது. உயர்வுமிக்க பண்பினால் ஒத்திருப்பதே ஒப்புக் கொள்ளக் கூடிய ஒப்பாகும். 993 நயத்தோடு நன்மை புரியும் பயன் உள்ளவர்களின் உயர் பண்பை உலகம் பாராட்டும். 99.4 விளையாட்டாகவும், பிறரை இகழ்ந்து பேசுதல் துன்பமானதாம்; பிறரது துன்பத்தை அறியவல்ல நல்லோரிடம் பகையிலும்பண்பே காணப்படும். 995 நற்பண்பு உடையவரைச் சார்ந்தே உலகம் நிலைத்து நடக்கிறது. அந்நிலை இல்லையேல் மண்ணுக்குள் மடிந்து மாய்ந்து போகும்; ஐயோ! 99.6 மாந்தர்க்கு உரிய பண்பு பெறாதவர், அரத்தைப் போல் கூரிய அறிவு பெற்றிருப்பினும், ஓர் அறிவு உடைய மரம் போன்றவரே யாவர். 997 நட்பு செலுத்த இயலாதவராய் நன்மையில்லாத தீச் செயல்கள் புரிபவரிடத்தும் பண்போடுஒழுக இயலாமை தாழ்வாகும். 998 மற்றவரோடு சிரித்து மகிழ்ந்து உறவாடவல்லவர் அல்லார்க்கு, மிகப் பெரிய இவ்வுலகம், பகலிலும் இருளுடையதாய்த் தோன்றும். 999 நற்பண்பு இல்லாதவன் பெற்றுள்ள பெரிய செல்வம், நல்ல பால் தான் இருக்கும் கலத்தின் பழுதால் திரிந்து கெடுதல் போல் பயனறும். 1 OOO