பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 பொருள் 101. நன்றியில் செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல், 1OO1 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. 1OO2 . ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. iOO3 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். 1OO4 கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். 1OO5 ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். 1 OO6 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. 1 OO7 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. 1OO8 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். 1OO9 சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. 1O1O