பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 215 101. நன்மை அளிக்காத செல்வம் இடமுழுவதும் நிறைந்த பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்தவன் அதனை நுகராது செத்தானானால் அச் செல்வத்தால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. 1001 பொருள் இருந்தால் எல்லாம் ஆகும் என்று கருதி யார்க்கும் கொடாது இறுக்கி வைத்துக் கொள்ளும் மயக்கத்தால் சிறப்பற்ற பிறவி தோன்றும். 1 OO2 ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக் கொண்டு புகழை விரும்பாத மக்கள் தோன்றியிருப்பது நிலத்திற்கு வீண் சுமையாம். 1 OO 3 பிறர்க்குப் பயன்படாமையால் ஒருவராலும் விரும்பப் படாத ஒருவன், தனக்குப் பின் எஞ்சி நிலைத்திருக்கக் கூடியதாக எதை எண்ணுவானோ? 1004 பிறர்க்கும் உதவுவதும் தாமும் நுகர்வதும் இல்லாத கருமிகட்கு, அடுக்கடுக்காகக் கோடிக் கணக்கில் செல்வம் உண்டானாலும் பயன் இன்று. 1 OO 5 தானும் துய்க்காதவனாய், தகுந்தவர்க்கும் ஒன்று உதவும் பண்பு இல்லாதவனாயுள்ளவன், பெருஞ் செல்வத்திற்கு ஒரு களங்கம் ஆவான். 1 OO6 வசதியற்ற ஏழைகட்கு ஒரு பொருள் உதவாதவனுடைய செல்வம், மிக்க பேரழகு பெற்ற ஒருத்தி மணமின்றித் தனியா யிருந்து முதுமையும் அடைந்த நிலை போன்றது. 1007 பயன்படாமையால் எவராலும் விரும்பப்படாதவனது செல்வம், ஊர் நடுவே நச்சு மரம் பழம் பழுத்தாற் போன்றதாம். 1 OO8 பிறரிடம் அன்பை விலக்கித் தன்னையும் வருத்தி அறநெறி பாராது ஒருவன் சேர்த்துள்ள வளமான செல்வத்தைப் பிறர் எவரோ பெற்று நுகர்வர். 1 OO 9 சிறப்புடைய செல்வரா யிருந்தவர் இடையிலே எய்திய சிறிய ஏழ்மை, வள்ளலான மேகம் இடையிலே வறட்சி மிக்காற் போன்ற தன்மையதாம். 1010