பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் 217 102. நாணம் 2_60L Gö) is) தீச் செயலுக்காக நானங் கொள்வதே நாணமாகும்; அழகிய நெற்றியை உடைய பெண்டிரின் நாணம் இதனினும் வேறானது. 1 O 11 உணவும் உடையும் பிள்ளை பெறுதல் முதலிய எஞ்சிய யாவும் எல்லா உயிர்கட்கும் வேறின்றிப் பொதுவே, எனவே மாந்தர்க்குச் சிறப்பு நாணம் உடைமையே. 1 O 12 உயிர்கள் எல்லாம் ஊனாகி உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; சால்புடைமையோ, நாணம் என்னும் நற்பண்பை இடமாகக் கொண்டுள்ளது. 1013 உயர்ந்தோர்க்கு நாணம் உடைமை ஒருவகை அணிகலம் அல்லவா? அஃது இல்லையெனில், அவரது பெருமிதமான நடை ஒரு நோய் அல்லவா? 1 O 14 பிறர் பழிக்கும் தம் பழிக்கும் ஒருசேர நாணுபவர், நாணத்திற்கே உறைவிட மானவர் என்று உலகம் கூறும். 1 O 15 மேலானவர் நாணமாகிய வேலியை மேற்கொள்ளாமல் பெரிய உலக வாழ்க்கையை மதித்து விரும்பார். 1 O 16 நாணத்தைக் கையாளும் நல்லோர், நாணத்திற்காகத் தம் உயிரையும் விடுவர் உயிருக்காக நாணத்தை விடவே மாட்டார். 1 O17 ஒருவன் தனக்காகப் பிறர் நாணும் இழிசெயலுக்குத் தான் நாணாதிருப்பா னாயின், அவனுக்காக அறமே நாணம் உடையதாகும். 1 O 18 ஒருவன் குறிக்கோள் தவறின், அது அவனது குலத்தை அழிக்கும் நாணம் இல்லா நிலை நின்று நீடித்தாலோ, அது அவனுடைய நன்மைகளை அழிக்கும். 1019 நெஞ்சிலே நாணம் இல்லாதவரின் நடமாட்டம், மரப் பொம்மையைக் கயிற்றால் இயக்கி உயிர் உடையது போல் மயக்கும் தன்மைத்தாம். 1 O2O