பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியியல் 219 103. தன் குடியை உயரச் செய்யும் திறம் ஒருவன் குடி உயர்வதற்குரிய செயலாற்றக் கைசோர மாட்டேன் என்று ஊக்கும் பெருமையை விடப் பெருமிதம் உடையது வேறொன்றுமில்லை. 1 O 21 வினை செய்யும் முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் ஓயாது புரியும் உழைப்பால் குடி தொடர்ந்து வளரும். 1022 குடியை உயரச் செய்வேன் என்று முயன்று உழைக்கும் ஒருவனுக்கு, தெய்வங் கூட தன் உடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் முன்வந்து உதவும். 1 O 23 தம் குடியை உயர்த்தக் காலம் தாழ்க்காது முயன்று உழைப்பவர்க்கு, அவர் எண்ணாமலேயே வெற்றி முடிவு தானே வந்து சேரும். 1024 குற்றம் இல்லாதவனாய்க் குடியை உயரச் செய்து வாழ்பவனை உலகினர் சுற்றமாகக் கொண்டு சூழ்ந்து வாழ்வர். 1 O25 ஒருவனுக்கு நல்ல ஆண்மை எனப்படுவது, தான் தோன்றிய குடியை ஆளும் திறமையை உண்டாக்கிக் கொள்ளுதலாம். 1 O26 போர்க் களத்தில் பொறுப்பு ஏற்கும் அஞ்சாத தலைவனைப் போல, ஒரு குடியைச் சேர்ந்த உறவினருக் குள்ளும் குடியைத் தாங்கிக் காக்க வல்லவரிடமே பொறுப்பு இருக்கும். . 1 O27 குடி உயர உழைப்பவர்க்கு அதற்கென ஒரு காலம் வேண்டியதில்லை; சோம்பல் கொண்டு, நாம் உழைப்பதா என மானமும் கருதின் குடி அழியும். 1 O28 குடியைக் குற்றத்திலிருந்து நீக்கிக் காப்பவனுடைய உடம்பு, துன்பத்திற்கே ஒரு குதிர் போலும். 1 O 29 எது நேரினும் அடுத்துத் தாங்கும் நல்ல ஆண்மகன் இல்லாத குடி, துன்பம் என்னும் கோடரி வேரை வெட்டிச் சாய்க்க வீழ்ந்தழியும். 1 O3O