பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 221 104. உழவுத் தொழில் உலகம் என்ன செய்து சுழன்று திரியினும், ஏர்த் தொழிலின் பின் நின்று பிழைக்க வேண்டியதே. ஆதலின், என்ன பாடுபடினும் உழவுத் தொழில் செய்வதே சிறப்பு. 令 103.1 உழவு செய்ய முடியாமல் வேறு தொழில்களின் மேற் செல்பவரை யெல்லாம் தாங்குவதால், உழவர் உலகினர்க்கு அச்சாணி போன்றவர். 1032 உழவு செய்து அதன் பயனை உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர் ஆவர்; மற்றவர் அனைவரும் பிறரைத் தொழுது உண்டு அவர் பின் செல்பவரே. 1033 பயிர்க் கதிரின் நிழலில் உழைக்கும் உழவர்கள், மன்னர் பலரின் குடை நிழல்களைத் தம் அரசரது குடை நிழலின்கீழ் அடங்கச் செய்வர். 1034 தம் கையால் உழவு செய்து உண்ணும் இயல்பினர் தாம் எவரிடமும் இரவார்; தம்மிடம் இரப்பவர்க்கும் ஒளிக்காது ஒரு பொருள் உதவுவார். 1035 உழவர் கைசோர்ந்து தொழில் செய்யாராயின், எல்லாரும் விரும்புவதை யாம் துறந்து விட்டோம் என்னும் துறவிகட்கும் வாழ்வு நிலையாது. 1 O 36 ஒரு பலம் அளவு மண்புழுதியைக் கால் பலம் அளவுக்கு உழுது உழுது காயச் செய்தால், ஒரு பிடி எருவும் தேவைப்படாமலேயே நிலம் நிரம்ப விளையும். 1037 ஏர் உழுதலினும் சிறந்த எரு போடுதல் நல்லது: மேற்கொண்டு களை பறித்த பின்பு நீர் பாய்ச்சுவதனினும் பயிரை விழிப்புடன் காத்தல் சிறந்தது. 1 O & 8 நிலத்தின் உரிமையாளன் அடிக்கடி நிலத்திற்குச் சென்று பார்வையிடாமல் இருந்தால் நிலம் உலர்ந்து மனைவியைப் போல் ஊடி வாடும். 1039 யாம் ஒன்றும் இல்லாதோம் என்று சோம்பி உழைக்காதிருப்பவரைக் கண்டால், நிலம் என்னும் பெண் எள்ளி நகைப்பாள். 1040