பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 பொருள் 105. நல்குரவு இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1O41 இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். 1O42 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. 1043 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். 1044 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். - 1045 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். 1046 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். 1O47 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. 1048 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. 1049 துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1O5O