பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 223 105. வறுமையின் கொடும்ை வறுமையைப் போல் துன்பமானது வேறு எது எனில், வறுமையைப் போல் துன்பமானது அவ்வறுமை ஒன்றுதான். - 1041 ஏழ்மை என்னும் ஒரு பொல்லாத பாவி, தன்னை உடையவனுக்கு மறு உலக இன்பமும் இவ்வுலக இன்பமும் இல்லாமற் செய்து விடும். 1 O 42 வறுமையால் வரும் நப்பாசை, தொன்று தொட்டு வந்த குடும்பப் பண்பையும் புகழையும் ஒன்றாகக் கெடுத்து விடும். 1 O 4 3 நற்குடியில் பிறந்தவரிடத்தும் இழிசொல் ஏற்படும்படி யான தளர்ச்சியை வறுமை உண்டாக்கும். 104.4 ஏழ்மை என்னும் ஒரு துன்பம் இருந்தால் அதனுள் மற்ற பல வகைத் துன்பங்களும் சென்று சேர்ந்து தங்கும். 10.45 வறியவர் நல்ல நூற்களின் கருத்தை நன்றாகப் புரிந்து எடுத்து விளக்கினாலும், அவரது சொல்லின் கருத்து ஏறாமல் சோர்வடையும். 1 O 46 அறத்திற்கு இடமில்லாத வறுமை, ஒருவனைப் பெற்ற தாயாலும் அயலானைப் போல் புறக்கணிக்கச் செய்யும். 104.7 நேற்றும் கொன்றது போல் வந்திருந்து வருத்திய வறுமை இன்றும் வந்து வருத்துமோ? 1 O 48 நெருப்பின் நடுவே கூட ஏதாவது செய்து தூங்கி விட முடியும்; ஆனால் ஏழ்மையின் இடையிலோ யாதொரு வகையிலும் கண் உறங்கல் இயலாது. 1049 நுகரும் பொருள் வசதி இல்லாதவர் முற்றும் துறவு கொள்ளாதிருப்பது, உப்புக்கும் புளித்த கஞ்சிக்கும் எமனாந் தன்மையதே. 1 O 50