பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 225 106. இரத்தல் (யாசித்தல்) இரந்து கேட்கத்தக்கவரிடமே சென்று இரக்க வேண்டும்; அவர் கொடுக்காது மறைத்தால் அது அவர் பழியே இரப்பவர் பழி அன்று. 1051 ஒருவரிடம் சென்று இரந்து கேட்ட பொருள் துன்புறாமல் கிடைக்குமாயின், ஒருவனுக்கு இரத்தலும் ஒருவகை இன்பமாம். 1052 ஒளிக்காத உள்ளமுடன் உதவும் கடமையை அறிந்தவர் முன்னே சென்று நின்று இரந்து கேட்டலும் ஒர் அழகுடையதாம். 1 O53 கொடாது மறைத்தலைக் கனவிலும் செய்தறியாதவரிடம் சென்று ஒன்று இரத்தலும் (அவர்க்கு நல்வாய்ப்பினை) ஈதலைப் போன்ற தகுதியாம். 1054 பிறர் கண்முன்னால் நின்று இரப்பவர் அத்தொழிலை மேற்கொண்டிருப்பது, மறைக்காது கொடுப்பவர் உலகத்தில் உள்ளதால்தான். - 1055 ஒளித்து மறைக்கும் இடையூறு இல்லாதவரைக் கண்ட அளவிலே, வறுமை காரணமான துன்பங்கள் அனைத்தும் ஒருசேர ஒழியும். 1056 இழித்து ஏளனம் செய்யாமல் பொருள் உதவுபவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே இன்புறுவதாகும். 1 O57 இரப்பவரைப் பெற்றில்லாவிட்டால், குளிர்ந்த இடத்தையுடைய இப் பெரிய உலகத்தின் நடைமுறை, மரப் பாம்மை கயிற்றினால் இயக்கப்பட்டு அங்குமிங்கம் போய் வருவது போன்றதாம். 1058 ஒன்று இரந்து அது கிடைக்கப் பெறாதவர் அங்கு நில்லாமல் சென்று விட்டபோது, கொடுக்கக் கூடியவரின் தோற்றம் எப்படியிருக்கும்? 1 O 59 இரப்பவன் ஈயாதவர்மேல் சினம் கொள்ளலாகாது; அவ்வாறு சினத்தலாகாது என்பதற்கு அவனது வறுமைத் துன்பமே போதுமான சான்று. 1060