பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 233 109. தலைவியின் அழகு மயக்கி வருத்துதல் இவ்வுருவம் தெய்வ மடந்தையோ? அழகிய மயிலோ? கனத்த தோடு அணிந்த மக்கட் பெண்ணோ புரியாது என் நெஞ்சம் மயங்குகிறதே! 108.1 கவரும் நோக்குடைய அப்பெண் என் பார்வைக்கு எதிர் எதிராகத் தான் பார்ப்பது, தானே தாக்கி வருத்தும் துடுக்குத் தெய்வம் ஒரு படையையும் துணைக் கொண்டு வந்தாற் போன்றது. 1082 எமன் என்பதை முன்பு கண்டறியேன், அது பெண் தன்மையுடன் பெரிய போர் செய்யும் கண்களை உடையதென இப்போது நேரில் கண்டறிந்தேன். 1083 பெண் தன்மையுடைய இப்பேதைப் பெண்ணுக்கு, கண்கள், பார்ப்பவர் உயிரைக் குடிக்கும் தோற்றத்துடன் பொருகின்றன. 1 O 8.4 இந்த இளம் பெண்ணின் பார்வை எமப் பார்வையா? கண் பார்வையா? பெண் மான் பார்வையா? (இல்லை) இம்மூன்றின் தன்மையும் உடையது. 1 O 85 இப்பெண்ணின் கொடும் புருவங்கள் கண்கட்கு மேல் வளையாமல் நேராய் நீண்டு பார்வையை மறைத்திருந்தால், இவள் கண்கள் நடுங்கும் துன்பத்தை எனக்குச் செய்திருக்க மாட்டா அந்தோ! 1 Ο 86 இப்பெண்ணின் சாயாத முலைகளின்மேல் இட்டுள்ள மாராப்புத் துணி, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகபடாம் போன்றது. 1 O 87 போரில் பகைவரும் அஞ்சும் எனது வலிமை, இந்தப் பெண்ணின் ஒளியுடைய நெற்றியழகுக்கு ஐயையோ உடைந்து ஒழிந்து விட்டதே 1 O 88 பெண்மான் போன்ற குறுகுறு பார்வையும் நாணமும் அணிந்த இந்நங்கைக்கு, அயலான அணிகளைக் கொண்டு வந்து மேலும் அணிந்திருப்பது ஏன்? 1 O 89 ஆக்கப்பட்ட கள் தன்னை உண்டவரிடம் தவிர, காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடமும் களி மயக்கம் உண்டாக்குவதில்லை. 1 O 9 O