பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 235 110. தலைவியின் உள்ளக் குறிப்பை உணர்தல் இவள் மையுண்ட கண்களில் இரட்டைப் பார்வை உண்டு; அவற்றுள் ஒரு பார்வை காம நோய் தரும் பார்வை; மற்றொன்று அந்நோய் நீக்கும் மருந்து. 1091 இவள் கண்ணால் திருட்டுத்தனமாக என்னைப் பார்க்கும் சிறு பார்வை, காம வேட்டையில் பாதி வெற்றி மட்டும் அன்று பாதிக்கும் பெரியதாகும். 1 O 92 என்னை ஏறெடுத்து நோக்கினாள் நோக்கி நாணத்தால் தலை வணங்கினாள்; அஃது அன்புப் பாத்தியில் அவள் பாய்ச்சிய நீராகும். 109.3 யான் அவளை நோக்கும்போது அவள் தரையை நோக்குவாள் யான் நோக்காதபோது தான் என்னை நோக்கி மெல்லச் சிரிப்பாள். 109.4 நேரே என்னைக் குறிவைத்துப் பார்க்கவில்லையே தவிர, மற்றபடி அவள் ஒரு கண்ணைச் சுருக்குவது போல் பார்த்துச் சிரிப்பாள். 1 O 95 வெளியில் பட்டுக் கொள்ளாதவர்போல் பேசினாலும், உள்ளே வெறுப்பின்றி விருப்புடையவரின் சொல்லின் குறிப்பு விரைவில் அறியப்படும். 1 O 96 வெறுப்பற்ற ஏளனப் பேச்சும் சினங் கொண்டவர் போன்ற பார்வையும், வெளியில் பட்டுக் கொள்ளாதவர் போன்ற உள்ளன்பு கொண்டிருப்பவரின் நடிப்பாகும். 1097 யான் நோக்கும் போது பற்றுடையவளாய் மெல்லச் சிரிப்பாள் அசைந்து நடக்கும் அவளுக்கு அப்போது ஒரு தனியழகு உண்டாகிறது. 1 O 98 முன்பின் அறியாத அயலார் போலப் பொதுவாகப் பார்த்துக் கொள்ளும் களவுப் பார்வை, காதல் கொள்பவரிடம் உண்டு. 1 O 99 காதலர்களின் கண்களோடு கண்கள் இணைந்து நோக்கால் ஒத்துவிட்டால், பிறகு வாய்ப் பேச்சுக்கள் எந்தப் பயனும் செய்ய வேண்டியன அல்ல. 1100