பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 237 111. தலைவியோடு புணர்தலுக்கு மகிழ்தல் பார்த்தும் கேட்டும் அருந்தியும் மோந்தும் தொட்டும் அறிந்து மகிழ்கிற ஐம்புல இன்பங்களும் ஒளியுடைய வளையலணிந்த இவளிடமே உள்ளன. 1 1 01 உலகில் ஒன்று தந்த நோய்க்குப் பிற பொருள் மருந்தாகும். ஆனால் அணிகலன் பூண்ட இவளோ தான் தந்த காம நோய்க்குத் தானே மருந்து. 11 O2 தாம் காதலித்த பெண்ணின் மெத்தென்ற தோளில் துயிலும் இன்பத்தினும் தாமரைக் கண்ணனாகிய கடவுளது உலகம் இனிக்குமோ? 1 1 0 3 (உலகியலுக்கு மாறாக) விட்டு நீங்கினால் சுடுவதும் கிட்ட நெருங்கினால் குளிர்வதுமாகிய (காமத்)தீயை இவள் எங்குப் பெற்றாளோ? 1 104 பூச்சூடிய கூந்தலுடைய இவள் தோள்கள் எவ்வெப்போது எவ்வெப் பொருள்களை விரும்பினோமோ அவ்வப் பொருள்கள் போலவே இன்புறுத்தும். 1 105 மேலே படுந்தோறும் என் உயிர் தழைக்கும்படி தீண்டுவதனாலே, இப் பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தத்தினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். 1 1 O 6 அம்மாடி! இப்பெண்ணின் புணர்ச்சி, தம் சொந்த வீட்டில் இருந்து கொண்டு தம் சொந்த உணவைப் பலர்க்கும் பங்கிட்டு உண்ணும் இன்பம் போன்றது. 1 107 தம் இருவருக்கும் இடையே காற்றும் புக முடியாதபடி நெருங்கி அழுந்தித் தழுவுதல், காதல் கொண்ட இருவருக்கும் மிக இனியதாகும். 1 1 O 8 பிணங்குதலும், உணர்ந்து பிணக்கு நீங்குதலும் பின் புணர்தலும் ஆகிய இவை காதல் கொண்டவர்கள் பெற்ற பேறுகளாம். 1 1 09 பல கலைகளை அறிய அறிய இன்னும் அறியாத வையே மிகுதி என உணர்வதுபோல், சிவந்த அணிகள் பூண்ட இவளைத் தழுவத் தழுவ, இவளிடம் பெற வேண்டிய இன்பங்கள் இன்னும் உள்ளமை அறியப் படும். 11 1 0