பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 239 112 தலைவியின் நலத்தைத் தலைவன் பாராட்டுதல் அனிச்சமலரே! நீ மற்ற மலர்களினும் நல்ல மென்மைத் தன்மை உடையை வாழ்க! யாம் விரும்பும் தலைவி உன்னிலும் மென்மைத்தனம் உடையவள். 1111 என் நெஞ்சே பலரும் மகிழ்ந்து காணும் மலர்கள் இவள் கண்களை ஒத்துள்ளன என்று கருதி, மலர்களைக் கண்டால் இவள் நினைவால் மயங்குகிறாய் நீ! 1 112 இவளுக்கு, தளிர் மேனியாம், முத்து பற்களாம், மலர் மணம் உடல் மணமாம், வேல் மை பூசிய கண்களாம், மூங்கில் தோள்களாம். 1113 குவளை மலர் இவள் கண்களைக் காணும் திறன் பெறின், சிறந்த அணிபூண்ட இவள் கண்களை ஒவ்வோம் என்று நாணித் தலைகவிழ்ந்து தரையை நோக்கும். 1114 இவள் அனிச்சமலரைக் காம்பு நீக்காது தலையில் சூடிக் கொண்டாள்; அச்சுமை பொறாத மெல்லிய இடுப்பிற்கு இனிச் சாவுப்பறை தவிர மங்கலப் பறைகள் ஒலிக்க மாட்டா. 1 115 விண்மீன்கள் திங்களுக்கும் இம்மங்கையின் முகத்திற் கும் வேறுபாடு தெரியாமல் தம்மிடத்தில் கலங்குகின்றன. 1116 தேய்ந்த இடம் மீண்டும் நிறைந்து விளங்கும் நிலாவிற்கு இருப்பது போல் தேயாத (என்றும் நிறைந்துள்ள) இவள் முகத்தில் களங்கம் உண்டா? 11. 3 7 நிலவே,நீ வாழ்க! இந்நங்கையின் முகத்தைப் போல நீயும் மிக்க ஒளிவீச வல்லமை உடையை என்றால், நீயும் என் காதலுக்கு உரிமை உடையை 1 118 நிலவே! பூப்போலும் கண்ணுடைய இப்பெண்ணின் முகத்தை ஒத்திருக்க வேண்டுமாயின், பலரும் பார்க்கத் தோன்றாமல் கற்புநெறி நிற்பாயாக! 1119 (மென்மைக்குப் பேர்போனவைகளாகிய) அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகும் இவள் காலடிக்கு நெருஞ்சிப் பழத்தின் முட்கள் போலாம். 1 120