பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 241 113. காதலர்கள் தம் காதல் சிறப்பை உரைத்தல் பணிந்து பேசும் இவளது வெண்பற்களில் ஊறுகிற நீர், பாலோடு தேன் கலந்தாற்போல் மிக இனிக்கும். 1121 இப்பெண்ணோடு எமக்கு இடையேயுள்ள தொடர்பு, உடம்போடு உயிர்க்கு இடையே என்ன தொடர்போ, அன்ன தொடர்பே 1122 என் கண்ணின் கருமணிக்குள் இருக்கும் பாப்பாவே நீ அங்கிருந்து போய்விடு! யாம் விரும்பும் அழகிய நெற்றியையுடைய காதலிக்கு அதுபோல் காவலான இடம் வேறு இல்லை. 1123 நல்லணி பூண்ட இவள் கூடியிருக்கும் போது, உயிர் உடம்போடு வாழ்தல் போன்றுளாள் பிரிந்த போது, உயிர்க்குச் சாவு நேர்ந்தது போன்றுளாள். $ 1 124 ஒளிமிக்க போர்க் கண்களையுடைய, இவளுடைய பண்புகளைத் தவறி மறந்துவிடின் மீண்டும் யான் நினைப்பேன்; ஆனால் நான் மறப்பதே இல்லையே! 11.25 எம் காதலர் எம் கண்ணின் உள்ளிடத்திலிருந்து நீங்கார்; யாம் கண்ணை மூடித் திறந்து இமைத்தாலும் துன்புறார்; அவ்வளவு நுட்பமாயுளார். 1126 காதலர் எம் கண்ணுள் உளார் ஆதலின், கண்ணை மையூசி அணி செய்தால் அவர் மறைவார் என உணர்ந்து அவ்வாறு செய்யோம். 1127 காதலர் எம் நெஞ்சிலும் உள்ளாராகலின், அவர் சுடப்பட்டு வெந்து போவார் என உணர்ந்து சூடான உணவை நெஞ்சுவழி உண்ண அஞ்சுகிறோம். 1128 கண்ணிமைத்தால் காதலர் மறைவார் என அறிவேன்; அவர் அவ்வாறு கண்ணுள் இருக்கவும், அன்பற்ற அயலார் என அவரைப் பழிக்கின்றனர் இவ்வூரார். 1129 காதலர் என் நெஞ்சில் என்றும் மகிழ்ந்து தங்கியுள்ளார்; அஃதறியாத இவ்வூரார், அவர் அயலார் - பிரிந்து போய்விட்டார் எனப் பழிக்கின்றனர். 1 13 O