பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களவியல் 243 114. காதலர் நாணம் துறந்ததை உரைத்தல் காமத்தால் அல்லற்பட்டு வருந்தியவர்க்கு, மடல் ஏறுதலைத் தவிர, வலிய காவல் வேறில்லை. (மடல் ஏறுதல் - பனை மடலால் ஆன குதிரை மேல் ஏறி ஊர் சுற்றி வந்து தம் காதலை வெளிப்படுத்துதல்) 1131 காதலியின் பிரிவைப் பொறாத என் உடலும் உயிரும் நாணத்தை விலக்கித் தள்ளிவிட்டு மடல் ஏறத் தொடங்கி விட்டன. 11 S2 முன்பு நாணமும் நல்ல ஆண்மையும் கொண்டிருந்தேன்; இப்போதோ காமுகர் ஊரும் மடலைக் கொண்டுள்ளேன். 1133 என் நாணம் நல்லாண்மை என்னும் தோணிகளை, காமம் என்னும் விரைவான வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. 1134 மடல் ஏறுதலையும் மாலை நேரத்தில் வருந்தும் காம வேதனையையும், மாலையும் சிறு வளையல்களும் அணிந்த என் காதலி எனக்குத் தந்துளாள். 11 S5 அப்பேதைப் பெண் காரணமாக என் கண்கள் மூடமாட்டா; எனவே, நள்ளிரவிலும் உறுதியாக மடலேற எண்ணுவேன். 1 136 கடலனைய மிக்க காம வேதனையால் வருந்தினாலும், மடல் ஏறாத பெண்ணைப் போல் பெருமையான பொருள் உலகில் இல்லை. 1 137 இவர் நெஞ்சு நிறையில்லாதவர் - மிக இரங்கத் தக்கவர் என்று பாராமல், காமம் மறைவைக் கடந்து பொதுமன்றம் வரை வந்துவிடும். 1138 எல்லாரும் அறியவில்லை என்று கருதி, அறிவிப்பதற்காக என் காமமானது தெருச் சந்திக்கு வந்து மருண்டு சுழல்கிறது. 11 o 9 யான் பட்ட காம நோயைத் தாங்கள் இன்னும் பட்டறி யாததால் அறிவில்லாத சிலர் எம் கண்ணுக்கு நன்கு தெரியும்படி எள்ளிச் சிரிக்கின்றனர். 1140