பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 247 116. பிரிவுத் துயரைப் பொறுக்க முடியாமை பிரிந்து செல்லவில்லை என்றால் என்னிடம் பேசு, பிரிந்து போய் விரைந்து வருதலைப் பற்றி என்றால் அப்போது உயிர் வாழ்பவரிடம் பேசிக் கொள். 1151 அன்று அவரது பார்வையே இன்பம் உடையதாயிற்று: இன்றோ அவரது புணர்ச்சியும், பிரிந்துவிடுவாரோ என அஞ்சும் எளிமையைத் தருகிறது. 1152 அறிவுள்ள நல்லோரிடமும் ஒருநேரம் பிரிவு இருக்கத்தான் செய்யுமாதலின், பிரியேன் என்று அவர் உறுதி கூறுவதை நம்புதல் இயலாது. 1153 அருள் கொண்டு 'அஞ்சாதே என ஆறுதல் கூறிய காதலர் பிரியின் (அவர் தவறேயன்றி) அவரது தேறுதல் மொழியை நம்பியவரிடம் தவறு ஏது? 1154 (தோழியே!) என்னைக் காப்பதனால் காதலரது பிரிவைத் தடுத்துக் காக்க மற்றபடி அவர் பிரிந்துவிடின் மீண்டும் சேர்க்கை அரிதாகும். 1155 காதலர் பிரிவதாகச் சொல்லும் கொடியவர் என்றால் அவர் மீண்டும் வந்து அருள்புரிவார் என்னும் ஆசை கைகூடாது. 1 156 தலைவன் பிரிந்த கொடுமையை, பிரிவால் இளைத்துப் போன முன்கை மணிக்கட்டிலிருந்து கழன்று விழும் வளையல்களே பலர் அறியத் தூற்றாவோ? 1157 தம் குழுவினர் இல்லாத ஊரில் வாழ்வது இனிமை யற்றது; இனிய காதலரைப் பிரிந்து வாழ்தலோ அதனினும் இனிமையற்றதாம். 1158 நெருப்பானது தன்னைத் தொட்டால்தான் சுடுமே தவிர, காமத் தீநோயைப் போல விட்டு நீங்கினாலும் சுடும் வல்லமை உடையதோ? * 1159 அரிய பிரிவிற்கு உடன்பட்டு, துன்ப நோயை ஒருவாறு நீக்கிப் பிரிவைத் தாங்கிக் கொண்டு பின்னும் உயிருடன் இருந்து வாழ்பவர் உலகில் பலர் உள்ளனரே! (அவர்களால் அது எவ்வாறு முடிகிறது?) 1160