பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லறவியல் 23 6. வாழ்க்கைத் துணையாம் மனைவியின் மாண்பு மனைவாழ்க்கைக் கேற்ற நற்குண நற்செய்கை உடையவளாய், தன் கணவனது வருவாய் வளத்திற்கேற்பச் செலவு செய்பவளே வாழ்க்கைக்கு உண்மையான துணைவி. 51 மனைவியிடம் மன்னயறத்திற்கு வேண்டிய சிறப்புப் பண்புகள் இல்லையெனில், வேறு எச் சிறப்பு இருப்பினும் குடும்ப வாழ்க்கை பயனற்றதே. 52 இல்லாள் நற்பண்பு உடையவளானால் அவ்வில்லில் இல்லாத பொருள் என்ன? அவளிடம் நற்பண்பு இல்லையெனில் அங்கே உள்ள பொருள் என்ன? 53 கற்பென்னும் கலங்கா வன்மை இருந்தால், உலகில் பெண்ணை விட மேலான பொருள்கள் யாவை? 54 கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே கடவுளாய் வணங்கிக் கொண்டே துயிலெழுபவள், பெய்யென்றால் மழை பெய்யும் அளவுக்குச் சிறந்தவளாவாள். 55 தன்னையும் வழுவாது காத்துத் தன் கணவனையும் அன்புடன் போற்றித் தகுதிமிக்க புகழை நிலைநிறுத்தித் தளர்ச்சி கொள்ளாதவளே சிறந்த குடும்பப் பெண். 56 பெண்டிரை வீட்டுச் சிறைக்குள் இட்டுக் காவல் காப்பதால் யாது பயன்? அவர்கள் கற்பு நிறைவால் தம்மைத் தாம் காத்துக் கொள்வதே தலையாய காவல். 57 மகளிர் தம் கணவரின் நல்லன்பையும் நன் மதிப்பையும் பெறும்படி நடந்து கொள்ளின், தேவர் வாழும் விண்ணுலகில் பெரும் பேறு பெறுவர். 58 புகழ்ச் செயல்புரியும் மனைவியைப் பெறாதவர்க்கு, தம்மை இகழும் எதிரிகளின் முன் ஆண் சிங்கம் போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இருக்க முடியாது. 59 மனைவியின் மாண்புடைமையே மனைக்கு மங்கலம் என்பார் பெரியோர் மற்றபடி அம் மங்கலத்திற்கு நல்லணியாகத் திகழ்வது நன் மக்களைப் பெறுதலாம். 60