பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 249 117. பிரிவுத் துயரால் மெலிந்து வருந்துதல் காம நோயை யான் மிகவும் மறைக்கிறேன்; ஆனால் இந்நோயோ, இறைப்பவர்க்கு ஊற்றுத் தண்ணீர் சுரப்பது போல் மேலும் மிகுதியாகிறது. 116.1 இக்காம நோயை முழுதும் மறைக்கவும் வல்லேன் அல்லேன் நோயை உண்டாக்கிய காதலர்க்கு எடுத்துச் சொல்லவும் வெட்கமாயிருக்கிறது. 1162 துயர் பொறாத என் உடம்பிலே உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமம் ஒரு பக்கமும் நாணம் ஒரு பக்கமுமாகத் தொங்குகின்றன. 1163 காமம் என்னும் கடல் மட்டும் நிலையாக உள்ளது: ஆனால் அதை நீந்திக் கடக்க உதவும் காவல் தெப்பம் நிலையாகக் கிடைத்திலது. 1164 நட்பாயிருக்கும் போதே துன்பம் வரச் செய்யும் காதலர், பகையானால் என்ன செய்வாரோ? அந்தோ 1165 கூடியபோது காமம் இன்பக் கடல் போன்றது: அக் காமம் பிரிவால் வருத்தும்போது உண்டாகும் துன்பம் அந்தக் கடலினும் மிகப் பெரியது. 1166 காமமாகிய கடிய வெள்ளத்தில் எவ்வளவு நீந்தியும் யான் கரை காணவில்லை. நடு இரவிலும் உயிர் பிரியாது யானே தனித்து உள்ளேன். 1167 இரவுக் காலம் எல்லா உயிர்களையும் தூங்க வைத்து விட்டு என்னைத் தவிர வேறு துணையில்லாதிருக்கின்றது: அந்தோ அது இரங்கத்தக்கது. 1 i 68 காதலர்கள் பிரிந்துள்ள இந்நாட்களில் நீண்ட நேரமாய்க் கழிகின்ற இரவுகள், பிரிந்துள்ள கொடியவரின் கொடுமை யினும் தாம் கொடியன. 1169 காதலர் உள்ள இடத்திற்கு என் மனம் போய் வருவது போலவே என் கண்களும் போய் வர முடியுமாயின் கண்கள் இதுபோல் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டியதில்லை; அந்தோ! 117O