பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 251 118. கண்கள் காதல் வேட்டையால் வருந்துதல் கண்கள் தலைவரைக் காட்டியதாலேயே யாம் கண்டு இக்காம நோயைப் பெற்றோம். அங்ங்னம் இருக்கக் கண்கள் இப்போது அழுவது ஏனோ? 1171 அன்று ஆராய்ந்தறியாமல் தலைவரைக் கண்ட கண்கள் இன்று பரிவு கொள்ளாமல் துன்புற்று வருந்துவது ஏனோ? 1172 அன்று கண்கள் தாமாகவே திடுமெனக் காதலரைப் பார்த்துவிட்டு இன்று தாமே அழுகின்றன. இது பிறர் எள்ளி நகைத்தற்கு உரியது. 1173 என் கண்கள் பிழைக்க முடியாத தீராப் பிணியை என்னிடம் நிலைநிறுத்திவிட்டு, தாம் அழுது சிந்தவும் முடியாமல் நீர் வற்றி விட்டன. 11. 74 கடலினும் மிக்க காம நோயை அன்று உண்டாக்கிய என் கண்கள் இன்று தூங்க முடியாவாய்த் துன்புற்று வருந்துகின்றன. 1175 எமக்கு இத்தகைய காம நோயை உண்டாக்கிய கண்கள் தாமும் இவ்வாறு அழுது துன்புறுவது, ஒ ஓ! மிகவும் நல்லதே. 1176 அன்று அவரை விரும்பிக் குழைந்து வேண்டுமென்று கண்டு காதலித்த கண்கள், இன்று தூங்காது துன்புற்றுத் துன்புற்று உள்ளே உள்ள நீர் முழுதும் வற்றுக. 1177 எம்மைக் காப்பாற்றாது காதல் மட்டும் கொண்டவர் எங்கோ உள்ளார், அந்தோ மற்று அவரைக் காணாமல் எம் கண்கள் அமைதி பெற மாட்டா. 11.78 எம் கண்கள் காதலர் வராதபோதும் பிரிவால் தூங்குவ தில்லை; வரினும் பிரிவரோ என அஞ்சித் தூங்குவதில்லை. அவ்விரு நிலையிலும் மிக்க துயர் உறுகின்றன. 1179 அடித்துச் செய்தி அறிவிக்கும் பறைபோல அழுது துயர் வெளிப்படுத்தும் கண்களையுடைய எம் போன்றவரிட மிருந்து மறைவான செய்தியை அறிந்து கொள்ளுதல் ஊரார்க்கு அரியதன்று, எளிதே' 1, 18 O