பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 253 119. உடலின் பசப்பு நிறத்தால் வருந்துதல் விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவுக்கு உடன்பாடு தந்தேன்; இன்று பசப்பு நிறம் கொண்ட என் உடலின் இயல்பை மற்று யார்க்கு எடுத்துரைப்பேன். 1181 பசப்பு நிறமானது, அக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமையுடன் என் உடல்மேல் ஏறி ஊர்ந்து பரவுகிறது. 1182 எனக்குப் பதிலுதவியாகக் காம நோயையும் பசலை நிறத்தையும் தந்துவிட்டு, என்னிடமிருந்து என் அழகுச் சாயலையும் நாணத்தையும் காதலர் எடுத்துக் கொண்டார். 11.83 யான் மிகவும் அவரை நினைக்கிறேன். பேசுவதும் அவர் பெருமையையே! இருப்பினும், எனக்குப் பசப்பு வந்தது வஞ்சனையன்றி வேறு யாதோ? 1184 இதோ பார், எம் காதலர் செல்கிறார்; இதோ பார் என் உடலில் பசலை நிறம் படர்வதை 1185 விளக்கின் அணைவை எதிர்பார்த்திருக்கும் இருட்டைப் போல, கணவனது புணர்ச்சியின் நீக்கத்தைப் பசலை நிறம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். 1186 காதலரை அணைத்துக் கிடந்தேன்; சிறிது அப்பால் நகர்ந்தேன் அச்சிறு பிரிவிற்கே அள்ளிக் கொள்ளலாம் போல் பசலை வந்து படர்ந்துவிட்டது. 1187 வள் பசப்பு கொண்டாள் என்று என்னைப் பழிக்கின்றனரே யன்றி, இவளை அவர் விட்டு நீங்கினார் என்று இரக்கப்படுபவர் எவரும் இல்லையே! 1 18.8 ஆசை காட்டிப் பிரிந்த அவர் மீண்டும் நல்ல நிலையில் வந்து கூடுவது உறுதி எனில், என் உடல் பட்டது பட்டுப் பசந்து போகவும் செய்யலாம். 11. 89 ஆசை காட்டிப் போன அவர் எனக்கு அருள் புரியாமையை எவரும் பழிக்க மாட்டார் என்றால், பசப்புற்றதாக யான் பேர் பெறுவதும் நல்லதே. 11.90