பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 255 120. தனிமைத் துன்பத்தின் மிகுதி தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்பும்படியான பேறு பெற்றவர், விதை கோது முதலியன இல்லாத காதல் கனியைப் பெற்றவர் ஆவர். 1.191 தம்மை விரும்பும் தலைவியார்க்குத் தலைவர் செலுத்தும் அருள், உலகில் வாழ்பவர்க்கு வானம் மழை பொழிந்தாற் போன்றதாம். - 1.192 விரும்பிய தலைவரால் விரும்பப்படும் தலைவியர்க்கு, "யாம் மீண்டும் வாழ முடியும் என்னும் இறுமாந்த நிலை பொருத்தமானதே. 119.3 எல்லாராலும் விரும்பப்படும் நற்பெண்டிரும், தாம் விரும்பும் தலைவரால் விரும்பப்படார் என்றால், இனி எவராலும் நட்புக் கொள்ளப்படார். 1194 நாம் காதல் கொண்ட தலைவர் அதுபோலவே நம் மேல் தாம் காதல் கொள்ளாதபோது நமக்கு அவர் என்ன நன்மை செய்வாரோ? 1, 195 காதல் ஓரிடத்தில் மட்டும் இருந்தால் இன்பம் தராது; காவடியைப் போல இரு பக்கங்களிலும் (இருவரிடத்தும்) இருந்தாலே இனிக்கும். 1196 காமன் (மன்மதன்) ஒருவரிடம் மட்டும் நின்று துன்பறுத்துகிறானே, அவ்வொருவருடைய துன்பத்தையும் துயரத்தையும் அவன் அறியானோ? 1197 விரும்பிய காதலரின் இன்சொல்லைப் பெறாமல் உலகில் உயிர் வாழ்பவரினும் வன்னெஞ்சம் உடையவர் எவரும் இலர். 1,198 விரும்பிய காதலர் அருளாது பிரிந்தார் என்றாலும் அவரைப் பற்றிக் கூறும் புகழுரைகள் செவிக்கு இனிக்கின்றன. 1, 199 என் நெஞ்சமே வீணாகக் கடலை வெறுத்து முனியாதே உன்னைப் பொருந்தாமல் பிரிந்தவரிடம் உனக்கு உற்ற நோயை அறிவிப்பாயாக! வாழ்க நீ! 12 OO