பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 259 122. காதலரைக் கனவில் காண்பதை உரைத்தல் காதலரின் துதாக வந்த கனாவுக்கு, யான் என்ன விருந்து செய்தனுப்புவேன்? 1211 என் கயல் விழிகள் தூங்குக என்று யான் கெஞ்ச உடனே தூங்குமானால், கனவில் வரும் காதலரிடத்தில் எப்படியோ யான் உயிர் பிழைத் திருப்பதை எடுத்துரைப்பேன். 1212 நனவில் அருள் புரியாத காதலரைக் கனவிலாவது காண்பதனால்தான் என் உயிர் போகாமல் இருக்கிறது. (நனவு - விழித்திருக்கும் நேரம்) 12 13 நனவிலே அருளாத காதலரைத் தேடித் தருவதற்காகக் கனவிலே காமம் வேலை செய்கிறது. 1214 நனவிலே காதலரைக் கண்டு நுகரும் அவ்வின்பம் போலவே கனவு கூடத்தான் கண்ட பொழுதே இனிக்கிறது. - 1215 நனவு (விழிப்பு நிலை) என ஒரு கொடுமை இல்லை யென்றால், கனவிலே காதலர் பிரியாமலே இருப்பாரே, அந்தோ! 1216 நனவிலே அருளாத கொடிய காதலர் கனவிலே வந்து எம்மை வருத்துவது என்ன தொடர்பு பற்றியோ? 1217 யான் தூங்கும்போது கனவில் காதலர் என் தோள்மேல் இருக்கிறார்; விழித்துக் கொண்டாலோ விரைந்து என் நெஞ்சுக்குள் ஒடி ஒளிகிறார். 1218 கனவிலே காதலரைக் கண்டறியா தவர்கள் தான் நனவிலே அருள் புரியாத அவரை நொந்து பழிப்பர். 1219 எம் காதலர் நனவிலே எம்மை விட்டுப் பிரிந்தார் என இவ்வூரார் பழிக்கின்றனரே, கனவிலே அவர் வருவதை இவர்கள் அறியார் போலும் 1220