பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 265 125. நெஞ்சத்தோடு வருந்திப் பேசுதல் நெஞ்சமே! இத் துன்பப் பிணியை நீக்கவல்ல ஒரு மருந்தை, ஏதாவது ஒரு வகையில் நினைந்து ஆராய்ந்து சொல்ல மாட்டாயா? 1241 என் நெஞ்சே, நீ வாழ்க! அவர் நம் மேல் காதல் இல்லாதவரா யிருக்கவும் அவர்க்காக நீ வருந்துவது அறியாமையே! 1242 நெஞ்சே! நீ இங்கே இருந்து கொண்டு அவரை எண்ணி வருந்துவது ஏன்? இத் துன்பப் பிணியை நமக்கு உண்டாக் ய அவரிடம், நம் மேல் பரிவு கொண்ட எண்ணம் இல்லையே! 1243 நெஞ்சே, நீ அவரிடம் செல்லும்போது இந்தக் கண்களையும் கொண்டு செல்! அவரைக் காண வேண்டுமென்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. 1244 நெஞ்சே! நாம் தம்மை அணுகினும் நம்மை அணுகாத காதலர் நம்மை வெறுத்து முனிந்து விட்டார் என அவரைக் கைவிடலாமா? 1245 என் நெஞ்சே! புணர்ந்து ஊடல் நீக்கவல்ல காதலரைக் கண்டால், அவர்மேல் பிணங்கி ஊடல் நீங்க மாட்டாய்; பொய்க் காய்ச்சல் காய்கிறாய்! 1246 நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விடு! அல்லது நாணத்தை விடு! இவ்விரண்டையும் ஒருசேர என்னாலே தாங்கவே முடியாது. 1247 என் நெஞ்சே பரிவு கொண்டு அவர் அருளவில்லையே என்று ஏக்கமுற்று, விட்டுப் பிரிந்த அவர் பின்னே செல்கிறாய்! நீ ஒரு பேதை 1248 என் நெஞ்சே! நம் காதலர் நம் உள்ளுக்குள்ளேயே இருக்கவும், நீ வேறு யாரை எண்ணித் தேடிச் செல்கிறாயோ, தெரியவில்லையே! X- 1249 நம்மைப் பொருந்தாது பிரிந்தவரை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டே மேலும் மேலும் அழகு இழந்து வருகிறோம். 125 O