இல்லறவியல் 25 7. மக்களைப் பெறுதல் ஒருவர் பெற வேண்டிய பேறுகளுள், அறிய வேண்டியவைகளை அறியவல்ல நன் மக்களைப் பெறுதலைத் தவிர வேறு பேறுகளை யாம் மதிப்பதில்லை. 61 பழிக்கு இடமில்லாத பண்புமிக்க பிள்ளைகளைப் பெறின், எதிராலே ஏழு பிறவிகளிலுங் கூடத் தீமைகள் அணுகா. , 62 ஒருவர்க்குத் தம் பிள்ளைகளே தம் சொத்துக்கள் என்பர் பெரியோர் பிள்ளைகளின் சொத்துக்களோ, தாம் தாம் செய்யும் செயலுக் கேற்பச் சேரும். 63. தம் பிள்ளைகள் சிறு கைகளால் துழவிப் பிசைந்தஉணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தினும் மிக இனிக்கும். 6 4. குழந்தைகளின் உடலைத் தொடுதல் பெற்றோர்களின் உடலுக்கு இன்பம்; அடுத்து அவர்தம் சொற்களைக் கேட்டலோ காதுக்கு இன்பமாம். 65 தம் பிள்ளைகளின் மழலை மொழியைக் கேட்டறியாதவர்களே, குழலிசை இனியதென்றும் யாழிசை இனியதென்றும் சொல்லிக் கிடப்பார்கள். 66 தகப்பன் தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது, கற்றவர் கழகத்தில் அவன் கல்வியறிவில் முன்னணியில் திகழும்படியாகச் செய்தலாம். 67 தம் பிள்ளைகள் அறிவுத் திறமையால் செய்யும் ஆக்க வேலைகள், தம்மை விட, பெரிய உலகில் என்றும் வாழும் உயிர்கட்கெல்லாம் இனிய நன்மை பயக்கும். 68 தன் மைந்தனைப் பற்றிக் கல்வியறிவொழுக்கங்கள் நிறைந்தவன் எனப் பிறர் புகழக் கேட்ட தாய், அவனைப் பெற்ற போதினும் பெரிதும் மகிழ்வாள். 69 மகன் தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய பதிலுதவி, இவனைப் பெற்ற இவன் தந்தை என்ன நோன்பு நோற்றானோ என்று பிறரைச் சொல்லச் செய்யும் புகழுரையாகும். 7 O
பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/27
Appearance