பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 269 127. பிரிந்தவரை அடைய விரைதல் என் கண்களும் அவரை எதிர்பார்த்து ஒளியிழந்து பஞ்சு பூத்தன என் கை விரல்களோ, அவர் சென்ற நாளைக் கோடிட்டு எண்ணி எண்ணித் தேய்ந்து விட்டன. 1261 விளங்கும் அணி பூண்ட தோழியே! இப்போது காதலர் மறந்தால், என் தோள் மேல் அணிந்துள்ள கடகம் அழகு கெட்டு மெலிவால் கழலும். 1262 வெற்றியை விரும்பி மனவுறுதியே துணையாக வெளிநாடு போந்த காதலரின் வருகையை எதிர்பார்த்து இன்னும் உயிரோடு உள்ளேன். 1263 என் நெஞ்சு, கூடிய காமத்தினின்றும் பிரிந்த காதலரின் வருகையைத் தொலைவில் எதிர்பார்த்து மரக் கிளையின் மேல் ஏறிப் பார்க்கும். 1264 யான் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக கண்டு விட்டால் என் மெல்லிய தோளில் உள்ள பசலை நிறம் தானே மறையும். 1265 காதலர் என்றாவது ஒருநாள் வருவாராக வந்தால் என் துன்பப் பிணியெல்லாம் கெடும்படி அவரது அழகை நுகர்வேன். 1266 என் கண்ணான காதலர் வந்தால், யான் அவருடன் ஊடுவேனோ? அல்லது அவரைக் கட்டியணைப்பேனோ? மேலும் அவரைப் புணர்வேனோ? 1267 (தலைவன் கூறுவதாக) வேந்தன் வினையில் முனைந்து வென்று நமக்கு விடை தருவானாக நாம் வீடு சென்று மனைவியுடன் கூடி இன்று மாலை விருந்துண்ணலாம்.1268 தொலைவில் பிரிந்துசென்ற காதலர் வரும் நாளைக்குறிக் கொண்டு ஏங்கும் காதலியர்க்கு, ஒரு நாள் ஏழு நாள் போல் நீண்டு கொண்டே போகும். 1269 காதலி உள்ளம் உடைந்து அழிந்து விட்டபின், நம்மைப் பெற முயன்றால் என்ன? பெற்று விட்டால்தான் என்ன? பெற்றுக் கூடினால்தான் என்ன? 127 O