பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 271 128. குறிப்பால் அறியச் செய்தல் தலைவியே! நீ மறைத்தாலும் உன் கையைக் கடந்து நில்லாமல், உன் கண்கள் சொல்லி அறிவுறுத்தும் குறிப்பு ஒன்று தெரிகிறது. 1271 கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற மெல்லிய தோளும் உடைய என் காதலிக்கு பெண்ணுக்கு உரிய நிறை பண்பு மிக்குள்ளது. 1272 கோக்கப்பட்ட மணிக்குள்ளே தெரியும் நூலைப் போல, இப்பெண்ணின் அழகுக்குள் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது. 1273 அரும்பு மொட்டுக்குள் அடங்கியிருக்கும் நறுமணத்தைப் போல், இப்பெண்ணின் புன்னகை மொட்டுக்குள் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உண்டு. 1274 பொருத்தமான வளையலணிந்த காதலி செய்துபோன குறிப்பு, மிக்க காம நோயைத் தீர்க்கும் ஒரு வகை மருந்தை உடையது. 1275 காதலர் பெரிதும் ஆறுதல் தந்து விருப்புடன் புணர்வது. விரைவில் அரிய பிரிவை ஏற்படுத்தி அன்பின்றிப் போவார் என்பதை அறிவிக்கும் குறிப்பே. 1276 குளிர்ந்த அழகிய துறைக்குரிய காதலர் பிரிந்ததை, நமக்கும் முன்னமே நம் கை வளையல்கள் உணர்ந்து கழலத் தொடங்கி விட்டன. 1277 எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார். யாமோ ஏழு நாளைய பசலை நிறத்தை இன்று ஒரு நாளிலேயே அடைந்துள்ளோம். 1278 தன் கழலும் வளையல்களையும் நோக்கி, மெலிந்த தோள்களையும் நோக்கி, பின் கால் அடிகளையும் நோக்கி அவள் செய்யும் குறிப்பு, தானும் உடன் வருவதாக அறிவிக்கும் அதுவே. 1279 அவள் தன் கண்ணாலேயே காம நோயைத் தெரிவித்து என்னிடம் இரப்பது, பெண்மைக்கு மேலும் சிறந்த பெண்மை உடையது என்பர். 128 O