பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 275 130. நெஞ்சோடு பிணங்கி வருந்துதல் என் நெஞ்சே! அவரது நெஞ்சு எம்மிடம் வாராமல் அவருக்கே ஆன பொருளாக இருப்பதை யறிந்தும், நீ மட்டும் எமக்கு ஆனதாக இல்லாமல் அவரிடம் செல்வது ஏன்? 1291 என் நெஞ்சமே! நம்மை அணுகாத காதலரைக் கண்டவுடனே, நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரை அடைகின்றாயே, முறையா? 1292 நெஞ்சே என்னை விட்டு, உன் விருப்பப்படி நீ அவர்பின் செல்வது கெட்டழிந்தவர்க்கு நண்பர்கள் இல்லை' என்னும் முதுமொழிப்படியா? 1293 நெஞ்சே! காதலருடன் ஊடலுற்று அவ்வூடலிலுள்ள சுவை அறியாய் நீ மற்றபடி இனி அதுபோன்ற எண்ணம் பற்றி உன்னோடு யார் கலந்து பேசுவர்? 129.4 என் நெஞ்சம், அவரைப் பெற முடியாதோ என அஞ்சுகிறது. பெற்று விட்டால் பிரிவாரோ என அஞ்சுகிறது: இங்ங்ணம் நீங்காத் துயருடையது. 1295 தனியே அமர்ந்து அவரைப் பற்றி நினைத்தால், அவரிடம் 'வா வா என்று என் நெஞ்சு என்னை அரித்தெடுத்துத் தின்னும்படியா யிருக்கிறது. 1296 அவரை மறக்க முடியாத சிறப்பற்ற மடத்தனமுள்ள என் நெஞ்சின் வலையில் அகப்பட்டு, பெண்மைக்குரிய நாணத்தையும் மறந்து விட்டேன். 1297 விடாமல் உயிரை விரும்பும் என் நெஞ்சம், அவரை இகழ்ந்தால் நமக்கே இழிவு என்றெண்ணி அவரது பெருமையைப் பற்றியே நினைக்கிறது. 1298 ஒருவர்க்குத் தம் நெஞ்சே துணையாயில்லாத போது, துன்பக் காலத்தில் வேறு யார் துணை செய்ய முன்வருவர்? 1299 ஒருவர்க்குத் தம்முடைய நெஞ்சே உறவாய் இல்லாதபோது, அயலார் உறவாகத் தஞ்சம் அடைவதற்கு உரியவர் ஆகார். 13 OO