பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 277 131. புலத்தல் (பொய்யான சிறுபிணக்கு) நெஞ்சே! அவரைப் புணராமல் இருந்து ஊடல் கொள்வாயாக! அதனால் அவர் அடையும் துன்பப் பிணியைச் சிறிது நேரம் கண்டு சுவைக்கலாம். 1301 உணவுக்கு உப்புப் போல் ஊடல் அளவாய் அமைய வேண்டும்; ஊடலை நீள விட்டால் அந்த உப்பு சிறிது மிகுந்து விட்டதுபோல் பயனற்று விடும். 13 O2 தம்மேல் ஊடல் கொண்டவரை ஆற்றித் தழுவாது விடுதல், துன்புற்றிருப்பவர்க்கு மேலும் துன்பம் செய்தல் போன்றதாம். 1303 ஊடியவரைத் தணிவு செய்யாது விடுதல், முன்பே வாடிய ஒரு கொடியை மேலும் அடி அரிந்து விட்டாற் போன்றதாம். 1304 பூப்போலும் கண்ணுடைய தலைவியாரின் ஊடலைப் பெறுவது, நல்லியல்பு உடைய ஆடவர்க்கு ஒருவகை அழகாகும். 13 O5 நீட்டித்த ஊடலும், பின் தணியும் புலவியும் இல்லை யென்றால், அளிந்த பழமும் முற்றாத உவர்ப் பிஞ்சும் போல் காமம் சுவைக்காது. 1306 புணர்ச்சி நீட்டித்து இருக்காது போலும் என்ற அச்சத்தால், ஊடலை நீட்டிப்பதிலும் ஒருவகைத் துன்பம் உள்ளது.1307 நம்மால் இவர்கள் வருந்துகிறார்கள் என்று அவ் வருத்தம் அறிந்து நடக்கும் காதலரை நாம் பெற்றில்லாதபோது நாம் மேலும் வருந்துவது ஏன்? 1308 தண்ணீரும் நிழற் பாங்கிலே உள்ளதானால்தான் குளிர்ந்து இனிக்கும்; அவ்வாறே, ஊடலும் நம்மை விரும்புவரிடத் திலேயே இனிக்கும். 13 O9 ஊடலைத் தணிக்காமல் காயவிடுவாரோடு கூடுவோம் என என் நெஞ்சு முயல்வது ஆசை காரணமாகவே 1310