பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 279 132. நுட்பமாய்ப் புலத்தல் பெண்ணுருவில் உள்ள பரத்தையர் அனைவரும் தம் கண்ணால் பொதுச் சொத்தாகக் கண்டு சுவைக்கின்றன ராதலால் பரத்தமைப் பட்டுவிட்ட உன் மார்பை யான் தழுவேன். 1311 யாம் கூடியிருந்த போது, நீடுவாழ்க எனத் தம்மை வாழ்த்துவோம் என்பது அறிந்து அவர் பொய்யாகத் தும்மினார். 1312 கிளைப் பூவைக் கொய்து வந்து சூடினாலும், ஒருத்திக்குச் சூட முன் கூட்டிச் செய்து பார்ப்பதற்காகச் சூடினீர் என்று சினக்கிறாள் அவள். . 1313 யாரையும் விட உன் மேல் காதல் உடையோம் என்று யாம் கூற, வேறு யாரை விட - வேறு யாரை விட என்று கேட்டு ஊடினாள் அவள். - 1 314 'இந்தப் பிறப்பில் பிரியேம் என்று யாம் சொன்ன அளவிலே, அடுத்த பிறப்பில் பிரிவீரோ எனக் கண் நிறைய நீர் சொரிந்தாள் அவள். 1315 'உன்னை நினைத்தேன்' என்று கூறினேன்; மறந்தால் தானே நினைக்க வேண்டும் - ஏன் மறந்தீர் என்று கேட்டு என்னைத் தழுவாமல் ஊடினாள் அவள். 1316 யான் தும்மினேன்; நூறு' என அவள் வாழ்த்தினாள்; உடனேயே உம்மை எவள் நினைத்ததால் தும்மினிர் என்று மாறி அழுதாள். 1317 எவள் நினைத்தாள் எனச் சினப்பாள் என யான் தும்மலை அடக்க, 'உம் காதல் மகளிர் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கிறீரோ" என்று அழுதாள். 1318 அவளது ஊடலை யான் ஆற்ற முயலினும், பிற பெண்டிரிடத்தும் இத்தன்மையினராக ஆகிப் பழகியுள்ளீர் என்று என்னைக் காய்கிறாள். 1319 அமைதியாய் அமர்ந்து அவளது அழகை எண்ணி உற்று நோக்கினும் அவ்வளவும் எவளை எண்ணி நீர் என்னை ஒத்திட்டுப் பார்க்கிறீர்' என்று காய்கிறாள். 1320