பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லுரை பேராசிரியர் சுந்தர சண்முகனார் 1958, 1959 ஆம் ஆண்டுகளில் தெவிட்டாத திருக்குறள் என்னும் பெயரில் எழுதி வெளியிட்டு வந்த திருக்குறள் உரை விளக்கங் களுக்கு மலேயா நாட்டு தமிழ் முரசு மே 1959 இதழில் வந்த மதிப்புரையிலிருந்து ஒரு பகுதி: உரை எழுத அஞ்சுதல் வேண்டு மென்பர் ஆன்றோர். பழுத்த இலக்கண, இலக்கியப் புலமையும், பரந்த பட்டறி வும், காய்தல் உவத்தல் இல்லாமையும் உரையாசிரிய லுக்கு இன்றியமையாதன என்பது கருதியே ஆன்றோர் இவ்வாறு கூறிச் சென்றனர். தானவனாகும் ஆற்றல் உரையாசிரியனுக்கு மிக மிக இன்றியமையாததாகும். இதனை ஆங்கில முருகியல் நூலார் EMPATHY என்பர். உரையொற்றுமையும் வேற்றுமையும் இந்த ஆற்றலின் வன்மை, மென்மைகட்கு ஏற்ப அமைவனவேயாம். உரையாசிரியனுக்கு இத்தகைய தகுதி வரையறுக்கப் பட்டிருக்கையில் இன்று தகுதி இல்லாரும் திருக் குறளுக்கு உரை எழுத முற்பட்டுள்ளனர். அவ்வுரை களை ஆராய்வது நமது நோக்கமன்று. இங்ங்னம் போலி உரைகள் தோன்றியுள்ள இக்காலத்தே சண்முகனாரின் உரை போன்ற நல்லுரைகள் தோன்றி வருவது நமக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. சண்முகனார் உரையில் பல நயங்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே oligouo (ORIGINALITY) புலப்படுகிறது. இத்தகைய நல்லுரைக்குத் தமிழ்ப் பெருமக்கள் பேராதரவு அளித்தல் வேண்டும்.