இல்லறவியல் 29 9. விருந்தினரைப் போற்றுதல் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கிப் பொருள்களைக் காத்து வாழ்வதெல்லாம் வரும் விருந்தினரைப் பேணி உதவி செய்வதற்கேயாம். 81 சாவா மருந்து எனப்படும் அமிழ்தமே கிடைத்திருப் பினும், விருந்தினர் வெளியே யிருக்கத் தான் மட்டும் தனித்து உண்ணும் செயல் விரும்பத் தகாதது. 82 நாள்தோறும் வரும் விருந்தினரைப் போற்றுபவனது வாழ்வு ஏழ்மையால் வருந்திக் கெடுதல் இல்லை. 83 நல்ல விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற் பவனுடைய வீட்டில், திருமகள் உள்ளங் குளிர்ந்து தங்கியிருப்பாள். 84 விருந்தினர்க்கு முதலில் உணவிட்டு மிஞ்சியிருந்தால் தான் உண்பவன், விதை நெல்லையும் விருந்தினர்க்கு ஆக்காமல் நிலத்தில் விதைக்க விரும்புவானா? 85 முதலில் வந்த விருந்தினரைப் போற்றி மேலும் வரும் விருந்தினரை எதிர்நோக்கி நிற்பவன், விண்ணுலகத் தேவர்க்குச் சிறந்த விருந்தினனாவான். 86 விருந்து வேட்டலின் (உதவியதின்) பயன் இவ்வள வினது என்னும்படி அதற்கு ஒர் அளவில்லை; விருந்தினரின் தகுதியின் அளவைப் பொறுத்ததே அது. 87 விருந்தினரைப் போற்றி உதவுதல் என்பதையே அறியாத கருவிகள், (யாம் செல்வத்தை) வருந்திக் காப்பது போல் காத்துச் சிறு பற்றும் (பசையும்) இல்லாவாறு இழந்துவிட் டோம் என்று (பின்னொரு கால்) வருந்துவர். 88 ஒருவர்க்குச் செல்வம் உள்ளபோதும் வறுமை உள்ளதென்றால், அது விருந்தோம்பாத மடத்தனமாகும். அம்மடமை அறிவிலிகளிடம் இருக்கும். 89 அனிச்சம் பூ நெருங்கி மோந்தால்தான் வாடும்; விருந்தினரோ, தொலைவில் முகத்தைச் சுளித்துப் பார்த்த அளவிலேயே வாடிவிடுவர். 9 O
பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/31
Appearance