பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 அறம் 10. இனியவை கூறல் இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து - இன்சொல னாகப் பெறின். 92 முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்ச்ொ லினதே அறம். 93 துன்புறுஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. 94 - பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றப் பிற. 95 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். 96 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும். 98 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 99 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 1 ΟΟ